Friday, 18 October 2013

ஒரு நதிக் கரையோரம்
ஒரு மரம் பூக்கிறதே

ஒய்யாரப் பாடல் பாடும்
சில குருவிகள் தேன் தேட...

ஒரு மலை அடிவாரம்
இரு மான்கள் நடை போடும்

இவை எல்லாம் ஒரு சேர்த்து
நம் உலகம் உருவாகும்....

என் நெஞ்சம் அலை மோத
உன் காதல் மொழி கேட்க

விழி இரண்டும் மூடியே நான்
விண்ணில் பாய்கிறேன்

என் அன்பே ஒரு முறை
குழல் தீண்டி போகிறாய்

கடல் அலை போலே
மனக் கரையில் மோதினேன்

இன்னும் ஜென்மன் வேண்டுமே
உன் மடியில் நான் தூங்க.... 

No comments: