Monday, 10 December 2012

காதல்

எட்டிச்செல்ல வானமிருந்தும்...
கட்டிப்புரள பூமியிருந்தும்....
கடந்து செல்ல கடலிருந்தும்..
.
உலகம் முழுதும் சொந்தங்களிருந்தும்...
ஏனோ தனித்து விட்டது போல்
மனபிறழ்வு......

தனியே வந்து
தவம் கலைப்பாயோ?? சகியே.
தனித்துவிட்டு
தடுமாறச்செய்வாயோ???

நீ மட்டும் உலகமென்றிருந்தேன்...
உறங்காமல் தவித்திருந்தேன்...
உளறாதே கிறுக்கா...
உன்னுள் நானிருக்க...
என்னவன் நீயன்றோ???

என ஏகாந்தமாய் உன்
முத்தங்கள் பொழிவாயோ???
உன் முகத்திரை கிழித்து
காதல் மழையில் நனைப்பாயோ?? <3 <3 <3

Wednesday, 28 November 2012

உன்னை  காண 22 வருடம்
தவம்  இருந்தேன்
23 வருட ஆரம்பத்தில்
 தரிசனம் கொடுத்தாய்

ஆயிரம வரங்கள்
கேட்க இருந்தேன்...
உன் ஆனந்தச்சிரிப்பில்
மறந்தே போனேன்.,..

ஆயிரம் கதை சொல்லும்
உன் அழகிய கண்கள்...

உடலுக்கும் காதலுக்கும் சம்பந்தமில்லை
என நினைத்தேன் உன் உடல் மொழி
எனக்கு ரசவாத வித்தைகள் காட்டியது...

கண்களா அது?? என்னை
அப்படியே காவு கொண்டது..
உன் தலை முடி கோதி
என் மூச்சியில் தீ ஏற்றினாய்..

உன் உதடுகள் இரண்டும்
உயர் ரக மதுவகை
என்னை மயக்கியே வைத்தது..

என் பேச்சில் நடுக்கம்...
என் மூச்சில் காய்சல்
என் பதபதைப்பு சுற்றியிருந்த
அனைவருக்கும் தெரிந்தது...
நீ மட்டும் அறியவில்லையோ??

கோபம் கொள்ளும் போது
உன் உதட்டோரம் வரும்
சிரிப்பில் யுகம் பல கடந்து போனேன்...

ஒரு மணிநேரம் என் எதிரே அமர்ந்து
சொக்க வைத்தாய்...
என் வாழ்நாள் முழுவதும் உன்னுடன்
இருக்கப்போகிறேன் என்று
நினைத்தால் உன் காலடியில்
நிப்பேன் சேவகனாக....<3 <3 <3

Saturday, 10 November 2012

தீபாவளி

வருடா வருடம் தீபாவளி எங்களுக்கு  ஒருவாரம் முன்னதாக ஆரம்பித்துவிடும்..வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவிலில் திருக்கல்யாண வைபம் மூன்று நாட்களுக்கு முன்னதாக துவங்கும்...

அந்நாட்களில் மட்டும் பள்ளியிலிருந்து அவசரமாக வருவோம்....வீட்டிற்கு வந்ததும் நானும் தங்கையும் ஆளுக்கு ஒரு முழுப்பெட்டி வெடிகளை தனியாக எடுத்து வைத்திருப்போம்....

அம்மா மிலிட்டரி கேண்டினிலிருந்து முந்திய சனிக்கிழமை வாங்கி வந்து விடுவார் அதில் வெடிகள் எனக்கும் மத்தாப்புகள் தங்கைக்கும் அவளுக்கு என்னிடம் இருக்கும் வெடிகளும் வேண்டுமென்பாள் அதனால் சண்டை வரும்...எங்கள் வெடி பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதே ஒரு உலக சாகசம்...

புதையல் காக்கும் பூதம் போல் இருப்போம்....ஒவ்வோரு நாட்களுக்கும் தேவையானதை பிரித்து வைத்து பக்காவாக தயாராவோம்.....திருக்கல்யாணத்திற்கு புதுத்துணி உண்டு அம்மாவோ இல்லை பெரியம்மாவோ வாங்கித்தருவார்கள்...

புது டிரவுசரின் ஒரு பையின் திரி கிள்ளிய பிஜிலி வெடிகளும் மற்றொரு பையில் தீப்பெட்டியும் 25 பைசா ஊதுபத்தி பாக்கெட்டுமாக சப்பரத்திற்கு முன்னாக செல்வோம்.....ஒவ்வொரு தெரு முக்கிலும் அணுகுண்டு அல்லது லக்ஷுமி வெடி உண்டு....

திருக்கல்யாணத்திற்கும் தீபாவளிக்கும் இடையில் உள்ள இரண்டு நாட்களுக்கு கோயில் ஊஞ்சல் ஆதலால் எந்த விசேஷமும் இருக்காது தீபாவளிக்கு முந்திய நாள் மாலை முதல் வரிசையாக வெடி வெடிப்போம் கரண்டு போஸ்ட் ஓட்டை,பாலடைந்த வீட்டின் தாழ்பால் ஓட்டை என எங்கும் எப்பொழுதும் வெடி வைப்போம்

வெடி காலியாகாமல் இருக்க நானும்,தேவா,விஜய்,சந்தோஷ் என வரிசையாக வைப்போம் இரவு 10 மணிக்கு கடைசி வெடி என்னுடையதாக இருக்கும் இல்லை தேவாவினுடையதாக இருக்கும்...

அதன் பின் நள்ளிரவு யார் வெடி வெடிப்பது என்ற போட்டி உண்டு பெரும்பாலும் அம்மாவும் அப்பாவும் மைசூர்பா,பர்ஃபி,முறுக்கு,சீடை,தேங்குழல்,மிச்சர் உக்காரை ( இது மட்டும் சுவைக்க தீபாவளி அன்று தான் தருவார்கள்) என செய்ய உக்கார அவர்களை வேடிக்கை பார்த்து 12 மணிக்கு அவசரமாக ஓடிச்சென்று அவர்களின் வீடருகில் சத்தமாக வெடிக்க 2 அணுகுண்டுகளை இணைத்து வெடிக்க வைத்து யாரும் வரும் முன் வீட்டிற்கு வந்து விடுவேன்...

மறுநாள் காலை எண்ணெய் தேய்த்து குளித்து அப்பாவும் தங்கையும் முதல் சரத்தை வெடிப்பார்கள் அன்று முழுவதும் வெடி தீர்ந்து அவள் மாலை என்னிடம் வெடி கேட்க சண்டை வந்து அவளுக்கு கிப்ட் பாக்ஸ்  கிடைக்கும் இரவு ரிஷபவாகனம் துவங்கும் பொழுதும் முடியும் பொழுதும் கட்டாயமாக எனது சரம் இருக்கும்....

தீபாவளி அன்று யார் வீட்டில் அதிக வெடி போட்டார்கள் எனபதை மாலை மிஞ்சும் குப்பைகளே முடிவு செய்யும்...

வெடிக்காத வெடிகள்,மற்றும் மிஞ்சிய வெடிகளைக்கொண்டு ஒரு ஆராய்சியே நடக்கும் அட்டையில் பொதிப்பது..மண்ணுக்குள் புதைப்பது என கார்த்திகை வரை நீளும்.,..கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்தும் பொழுது மொத்தமாக நாங்களும் எங்கள் ஏவுதளத்தில் ( பழைய டயர் )வெடிப்போம்...

நாங்கள் வைக்கும் ராக்கெட் அல்லது வித்தியாசமான வெடிகளினால் மயிரிலையில் எரிவதிலிருந்து தப்பித்துள்ளன வைக்கோற்போர்களும் அதிகம்....

பத்தாம் வகுப்பில் தீபாவளிக்கடுத்த நாள் பள்ளி வைத்தார்கள் எனபதற்காக பள்ளியில் சரம்,பிஜிலி.ஓலை,மற்றும் கல் வெடி போட்டது அதிகம் கல் வெடி பாறை உடைக்க பயன்படும் என்று அதன் சத்ததினால் 12 வகுப்பு வரை நம்பியிருந்தேன்....

இப்பொழுது தீபாவளி எதற்காகவோ வருகிறது புத்தாடையுடன் போகிறது...

Friday, 9 November 2012

காதலிக்க நேரமுண்டு தீபாவளி சிறப்பு பகுதி

இது தொடர்ச்சி இல்லை சும்மா தீபாவளி ஸ்பொசல்....

ரகுவும் லக்ஸாவும் காதலிக்க துவங்கி பற்பல சண்டைகள் சமாதானங்கள் என மூன்று மாதங்கள் கடந்து முதல் தீபாவளியை கொண்டாடினர்...ரகுவிற்கு எப்போதும் போல் பகீரத பிரயத்தனம் செய்தும் தீபாவளிக்கு ஊருக்கு செல்ல டிக்கட் கிடைக்கவில்லை..

அதனால் அவ்வருட தீபாவளியை அவன் சென்னையில் உறவினர்களுடன் கழிக்க முடிவுசெய்தான்...20 வயதில் முதல் முறையாக தீபாவளிக்கு வீட்டிற்கு செல்லாமுடியாமல் இருப்பதன் சோகம் அவனை என்னென்னவோ செய்த்து..

அவனுக்காக இவ்வருட தீபாவளியை சென்னையில் கழிக்க திட்டமிட்டு தன் விமான டிக்கட்டை ரத்து செய்தால் லக்ஸா.....

தீபாவளிக்கு முந்திய மாலை....ரகுவின் செல்லிற்கு ஒரு குறுந்தகவல்...
எப்பொழுதும் போல் நண்பர்களின் தீபாவளி வாழ்த்தாய் இருக்குமென எடுத்து பார்த்த பொழுது லக்ஸாவிடமிருந்து....

ஆவலாய் பார்த்தான்... '' ஹே பிட்டா....ஐ கேன்சல்ட் மை டிக்கெட் திஸ் இயர் வி செலிப்ரேட் டிவாளி டுகதர்''

சடாரென வந்த மின்சாரம் போல் இவன் முகம் பிரகாசமானது... '' இஸ் இட் ??'' ஆச்சரியத்துடன் கேட்டான்...இரவு முழுவதும் குறுஞ்செய்தி அரட்டையில் கழித்தனர்...

மறுநாள் காலை சம்பிரதாய தீபாவளி முடித்து நண்பர்களை பார்க்க செல்வதாய் கூறி நண்பனிடம் இரண்டு சினிமா டிக்கெட் எடுக்க சொல்லி...
அவளை  பார்க்க சென்றான்...இளஞ்சிவப்பு நிறத்தில் சுடிதார் அணிந்து ஒரு தேவதை போல் காட்சி தந்தால்...இவனும் அவளை வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான்..

பின்னால் இருந்து மிதுன்,கார்த்திக்,தேஜூ,பவி,கீர்த்தி (லக்ஸாவின் கல்லூரி தோழி) எல்லோரும் ஒன்றாய் '' ஹேப்பி தீபாவளி'' என்று காது கிழியும் அளவிற்கு கத்தினர்...

சற்று அதிர்ச்சியுற்ற ரகு பின் சுதாரித்தவாறு கார்த்திக்கிடம் ''நீ புனே போகல?? உன்னை நாங்க தானே வழி அனுப்பி வைச்சோம் நீ எப்படி இங்க??'' என்று ஆச்சரியம் பொங்க கேட்டான்....

ஆமாம் போனேன் நேத்து ஈவனிங் எல்லாரும் உனக்கு சர்பிரைஸ் தரலாம்னு
சொன்னாங்க கிளம்பி வந்துட்டேன் என்றான்....பின் லக்ஸா அவனருகில் நெருங்கி அவன் தோளில் கைவைத்து முத்தம் கொடுப்பதுபோல் நெருங்கி வந்தாள்...

உடல் கூச கண்கள் மூடி அவளை தல்ல முயன்றான்....அவள் சட்டென மிதுனிடமிருந்து பையை வாங்கி ''ஹேப்பி தீபாவளி'' என புத்தாடை நீட்டினாள்,....அதில் இரண்டு செட் ஆடைகள் இருந்தது .....

ஒன்றும் புரியாமல் வினாவினான்...ஒன்று மிதுன் கொடுத்தது...இன்னொன்று
லக்ஸா கொடுத்தது....பின் அனைவரும் பட்டாசு வெடித்து படம் பார்த்து ஒரு நாள் போனது தெரியவில்லை...மாலை அவனது உறவினர்கள் அழைத்ததும் தான் நினைவுக்கு வந்தது...அவன் அங்கு வருகிறேன் என சொன்னது,,,,

Wednesday, 31 October 2012

காதலிக்க நேரமுண்டு 5

சிக்கனும் எழுமிச்சை சாதமும் அவர்களின் பசி போக்க இனிதே ஆரம்பமானது அரட்டை கச்சேரி....

அதுவரை அமைதிப்புயலாய் இருந்த ரகு மொக்கை புயலாக மாறினான்....நண்பர்களின் கலாய்ப்புகளுக்காகவே அவன் பேசுவது போல் லக்ஸாவிற்கு தோன்றியது....

அதுவரை அவனை கொஞ்சம் கொஞ்சம் கலாய்த்து சீண்டிப்பார்த்த லக்ஸா...இன்னும் சீண்டிப்பார்க்க அவளது துறையான பொருளாதாரத்திற்கு பேச்சை மாற்றினாள்....எதற்குள் செல்ல கூடாதென்று  மிதுனும் கார்த்திக்கும் நினைத்தார்களோ..அதனுள் சென்றது பேச்சு....

அதுவரை பொறுமையாய் இருந்த ரகு தன் வாழ்வை தீர்மானிக்கும் பேச்சுபோல் முழு மூச்சாக பேச ஆரம்பித்தான் அவன் ஆரம்பித்தால் நிறுத்த மாட்டான் என்று அறிந்த அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்..

மகுடிக்கு ஆட்பட்ட பாம்பு போல் இவளும் அவன் பேச்சிற்கு மயங்கி 2 மணி நேரம் போவது தெரியாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்....

இரண்டு மணி நேரமாகியும் இவர்கள் பேச்சு ஓயாததால் மற்ற அனைவரும் எரிச்சலுற்று இவர்களை மெரினா அழைத்துச்சென்றனர்...இல்லை இழுத்துச்சென்றனர்...
.
வழியில்...ரகுவின் மொபைலில் ஒரு குறுஞ்செய்தி...
'' ஆர் யூ எக்கானமிக் ஸ்டூடன்ட்?? ''
பார்த்த எண் சட்டென நினைவுக்கு வரவில்லை....
பதில் அனுப்பினான் '' நோ...ஐயாம் இன்ஜினியரிங் ஸ்டூடன்ட் மே ஐ நோ ஹூஸ் நம்பர் இஸ் திஸ்?? ''

இரண்டு நிமிடம் கழித்து ''இட்ஸ் யுவர்ஸ்''என்று பதில் வந்தது...மிகவும் குழம்பியவாரு மிதுனிடம் கேட்டான்...மிதுன் எண்ணை பார்த்து சிரித்தவாரே..'' மடையா இது உன் நம்பர் தான் நீ தான் லக்ஸாட்ட கொடுத்த அதுக்குள்ள மறந்துட்டியா?? '' என்றான்...

என்ன கூறுவதென்று தெரியாமல் அசடு வழிந்தவாரே...வெளியே பார்த்தான் மிகவும் அழகாய் தெரிந்தது கூவம் கடலுடன் சங்கமிக்கும் இடம்

நேரம் வளரும்.............

காதலிக்க நேரமுண்டு 4

தேஜு ,ஐஸூ கார்த்திக் மூவரும் உள்ளே செல்ல...ரகு வாசலில் நின்று எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்...மற்ற ஐவரும் சமயல் வேலைகளை ஆரம்பிக்க இவள் மட்டும் அவனை பார்த்துக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தாள்...

 உள்ளிருந்து தேஜூ '' லக்ஸ்....வீ ஆல் வில் ஈட் நான் வெஜ் ...ஹவ் அபௌட் யூ போத்??? '' என்று உரக்க கத்தினாள்.....

சித்தம் தெளிந்தவாறு...'' வெயிட்...அவன்ட கேட்டு சொல்றேன்'' என்று வாசலுக்கு நடந்தாள்....

வாசலில் அழகாய் எறும்புகள் ஊர்வதை வேடிக்கை பார்த்தவாறு இருந்த ரகுவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்...

சடாரென திரும்பிய ரகு இவள் இருப்பதை எதிர்பாராது திடுக்கிட்டான்... பின் இருவரும் கண் இமைக்காமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருதனர்...ரகு மெல்ல தன் பார்வையை அவள் அங்க அவயங்களில் ஊடுருவச்செய்தான்....

வெட்கம் வந்தவளாக அவனிடம் தெலுங்கில் ''நான் பிராமண குடும்பத்தை சேர்ந்தவள் அசைவம் சாப்பிட மாட்டேன் நீயும் சாப்பிட மாட்டனு அவங்க சொன்னாங்க அதான் என்ன சமைக்கலாம்னு கேட்க வந்தேன்'' என்று அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்...

இவளின் இந்த 'சாதி' வார்த்தைகளில் எரிச்சலான ரகு ''நானும் பிராமண குடும்பத்தை சேர்ந்தவன் தான் ஆனால் எனக்கு அசைவம் பிடிக்காது...மேலும் நீ இனி இந்த சாதி பாசத்தில் என்னுடன் பேசினாள் அதுவே கடைசி பேச்சாக இருக்கும் நம்முள்...இங்கு வாழ்கை முறை வேறு....அங்கு வேறு.....ஐ ஹோப் யூ கேன் அன்டர்ஸ்டான்ட் இட்?? ''என்றான்...

ஒன்றும் புரியாமல் சரி என்பது போல தலையசைத்தாள்....

இவர்களை காணாததால் உள்ளிருந்து வந்த ஐஸூ சற்று செருமியவாரே....''ஹம்...ஹம்.....யப்பா குல்டீஸ் உங்களுக்கு  சமைக்கலாமா?? வேண்டாமா?? சொல்லுங்க..? இல்ல நீங்க ரெண்டுபேரும் சிக்கன் சாப்பிட போறீங்களா?? என்று சிரித்தாள்....

லக்ஸா ''இல்லை நானே வந்து சமைக்கிறேன்...நீங்க முடிக்கட்டும்னு தான் காத்திருந்தேன்....உனக்கு லெமன் ரைஸ் ஓகே வா??'' என்று ரகுவை பார்த்து கேட்டாள்...

மவுனமாய் தலையசைத்து செல்லில் ரிங்க்டோன் கேட்க செல்லை எடுத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்தான்....

உள்ளே சமயலறையில் நண்பர்களின் கலாய்ப்புக்கு நடுவில் அருமையான எலுமிச்சை சாதமும், சிக்கனும் தாயார் ஆனது...


நேரம் வளரும்.........

Tuesday, 30 October 2012

காதலிக்க நேரமுண்டு 3

மறுநாள் காலை லக்ஸா எழுந்த பொழுது ரகு உறங்கிக்கொண்டிருந்தான்...
ஜன்னலோரம் ஜில்லென்ற காற்று மனதிற்கினமாய்...
தன்னை அறியாமல் புன்னகைத்தவாறு காற்றில் கிறுக்கிக்கொண்டிருந்தாள்....


உள்ளிருந்து மிதுனும் பவியும் புது காதலர்களின் புத்துணர்ச்சியுடன் வெளி வந்தனர்.....

பவி :  ஹே டியர் ஸ்லெப்ட் வெல்???
 லக்ஸா  : ஹம்ம்ம்....யா.
பவி : வித் ஹிம்...???.என்று சிரித்தாள்...
கண்களால் எரிப்பது போல் பார்த்தாள் லக்ஸா..........

அவ்விடம் சூடாவதை அறிந்த மிதுன் '' ஹே...!!கர்ல்ஸ்...சில்ல்.ரே..முதல்ல ரெண்டுபேரும் குளிங்க சாப்பிட போகலாம்'' என்று கூறி ரகுவை எழுப்ப முயன்றான்.....

அவ்விருவரும் உள்ளே சென்றதும் ஒரு வழியாக ரகுவை எழுப்பினான்...

பின் நால்வரும் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று உணவருந்தினர்...
யாரும் பார்க்காத பொழுது லக்ஸா மட்டும் ரகு சாப்பிடும் அழகை ?! ரசித்தாள்...

கடையிலிருந்து வரும் பொழுதே அன்றைய பொழுது போக்கு முடிவாயிற்று...
சனிக்கிழமை என்பதால் மாலை கடற்கரைக்கு செல்வதென்றும் மதிய உணவு அவர்களே சமைப்பது என்றும் முடிவாயிற்று....

எவ்வித சஞ்சலமும் இல்லாமல் ரகு லக்ஸாவினை கண்களால் அளவெடுத்துக்கொண்டிருந்தான்.....

லக்ஸா வெட்கத்தில் தலை கோதி அவள் அழகிற்கு மேலும் அழகு சேர்த்துக்கொண்டிருந்தாள்...அவளை பார்க்க மிதுனுக்குள்ளும் ஏதோ செய்தது....

இதை கவனித்த பவி லக்ஸாவிடம் '' டியர் நீ அழகு தான் அதுக்காக என்னோட ஆள மடக்கிடாத உனக்கு வேணும்னா ஒரு நல்ல பையன நானே காமிக்குறேன் இவனுக பாக்குறத பாரு ?? தே வில் ஜஸ்ட் ஈட் யூ வித் தெயர் ஐஸ்..''  என்று சொல்லி நங்கென்று மிதுனின் தலையில் குட்டினாள்....

பலி மேடையிலிருந்து மீண்டு உயிர் பெற்ற பலிஆடுகள் போல் இருவரும் அசடு வழிந்தனர்...
அப்பொழுது தேஜூ,ஐஸூ கார்த்திக் மூவரும் வந்து வீட்டின் கதவை தட்டினர்...
ரகு எழுந்து கதவை திறக்க சென்றான்...கண் கொட்டாமல் அவன் நடையை கிரகித்துக்கொண்டிருந்தாள் லக்ஸா...

நேரம் வளரும்......

Tuesday, 23 October 2012

மழை-2

மாலை நேரத்தில் மழையை
ரசிக்கிறாய் நீ....

மழையோடு சேர்த்து உன்னையும்
ரசிக்கிறேன் நான்....

'மது'வென்றழைத்து நீ
திரும்பும் முன்...

உன் கரம் கோர்த்து
இடை பிடித்து

உன் முகம் பார்க்கிறேன் நான்
என் மார்பில் முகம் புதைக்கிறாய் நீ...

நான் இழுத்த விசையோ???
நம் இதழின் பசையோ???

ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டது....
நம் உயிர் ஒட்டிக்கொள்ள... ♥

மழை 1

அந்தி மாலைப்பொழுதில்
நீயும் நானும்...

ஜன்னலோரமாக உன் மார்பில்
முகம் பதித்து நாம்

மழையை ரசிக்கிறோமா?? இல்லை
மழை நம் காதலை
ரசிக்கிறதா???

Monday, 22 October 2012

வரம்

கடவுளிடம் வரம்
கேட்க சென்றேன்

ஓ கடவுளே!!!
வரம் கொடு.....

அட போடா....
அலட்சிய பதில்...

வெகுன்டெழுந்தேன்...

சீற்றம் உஷ்ணமாயிற்று....

கடவுளும் பயந்தார்....
கண்ணிலும் சோகம்..

என் கோபம் தனிந்தது ஆயினும்
மனம் பொருக்கவில்லை..

என்னாயிற்று? உனக்கும்
பிரச்சனையோ???

ஆம் என்பதுபோல்
ஒரு மவுனம்...

சரி...சொல்..!
இஷ்டமுன்டெங்கிள்...

சற்று விழித்தவாரே...
''ஆக்சுவளி'' என்றான்

சுண்டெலி போல்
சுருங்கிய முகத்துடன்

இன்பமாயினும்,துன்பமாயினும்
என்னை வைத்தே விளையாடுகின்றனர்...

சரி அதற்கு???...

உன் கவிதை போல்,
''நான் நானாக....நீ கடவுளாக''
இருக்க வேண்டும்....

ஓ..!சரி என்றேன்...
நன்றி நான் வருகிறேன் என்றான்..

நீ எங்கு செல்கிறாய் என்றேன்...
இப்பொழுது நீ கடவுள்
நான் மனிதன்

சரி வரம் கேட்க வந்தவனை
வரம் கொடுக்க செய்தாய்

என்ன வரம் வேண்டும் கேள்???
சற்று கர்வத்துடன்

நான் கடவுளடா...!!!!!!!
எனக்கே வரமா??

அப்பாடா...நிம்மதி தந்தாய் கடவுளே...
''நான் நானாக...நீ கடவுளாக..''

மறுநாள் காலை முதல் பக்க செய்தியில்...
''கடவுளை காணவில்லை''.....

Sunday, 14 October 2012

பொம்மை

காலில் கல் பட
கண் கசக்கினாய்...

ஒன்றுமில்லை
சிறு அடி

ஒத்தடம் வைத்தேன்
சரியாயிற்று....

உன் உள்ள பதபதைப்பு

என் வலி மறக்க செய்தது

பொம்மையை பொத்தி
பாதுகாப்பது போல்

என்னை கவனிக்கிறாய்
எனக்கொன்றென்றால் பதறுகிறாய்

உனக்காக நானும் ஆகிறேன்
சிறு பொம்மையாக.... ♥ ♥

மூச்சு

என் இதழோடு
உன் இதழ் சேர்த்து

என் மூச்சுமுட்ட
நீ முத்தமிட்டாய்

மூச்சடங்கி நம்
உயிர் பிரிந்தது

பிரிந்த என்னுயிர்

உன்னுள்ளும்

உன்னுயிர் என்னுள்ளும்
ஒன்றெனக்கலந்தது....

மூச்சுமுட்டும் முத்தங்களால்
மொத்தமாக........♥ ♥♥♥

காதலிக்கிறாயா???

காதலிக்கிறாயா???-ஆம்
எவ்வளவு??!!!!!

சொல்லவேண்டுமோ???
-ஆம்

இப்பிரபஞ்ச புள்ளிக்கும்
உன் ஆன்மாவிற்கான அளவு

காதிலிக்கிறாயாயா??-ஆம்

எவ்வளவு???!!!

சிறு பொட்டளவு மட்டுமே....
புரியவில்லையோ??-ஆம்

இப்பொழுது புரியுமென
கண் இமைத்து...
கரம் சேர்த்து...

புரியவைத்தாய்
உன் செவ்விதழ்களால்.....♥ ♥ ♥ ♥

சிரிப்பு

மின்னலென சிரித்தாய்....
என் உயிர்கண் குருடாயிற்று...

மீண்டும் சிரித்தாய்
என் பார்வை வந்தது...

அது என் பார்வையோ???
அது உன் பார்வையோ???

நீ,நான் என நினைத்தேன்

நான் நீ எனக் கொண்டாயோ??

நான் எனைக் கொன்றாயோ??
நாம் எனக் கொள்வாயோ?? ♥♥♥

Tuesday, 9 October 2012

காது

கவிதைகள் சொல்ல
காதுகள் கேட்டேன்..

நீயும் உன்
காது கொடுத்தாய்...

உன் காதோரம்
சுருளும் முடியும்

உன் காதின்

மடிப்புகளும்...ஆயிரம்

ஆயிரம் கவி
சொல்லுதே....பின்
நான் எதற்கு???

அறியேன்

யாப்பிலக்கணம்
அறியேன்.....

'ல'கர...'ன'கர வேற்றுமையும்
அறியேன்...

சந்திப்பிழை யொற்றும்
அறியேன்...

ஆயினும் கவிஞன்
அடியேன்...

எம் தமிழ் தரும்
தன்னம்பிக்கையால்.....

உன் மேல் உள்ள 
காதலால்.....<3

பசி

பசி என உன் முன் வந்தேன்
தண்ணீர்  கூட இல்லை என்றாய்....

பசி என உன் மடி சாய்ந்தேன்
மாரில் பால் கூட இல்லை என்றாய்...

பசி என உன் முகம் பார்த்தேன்
என் விழி பார்த்து அருகில் வந்தாய்....

என் இதழோடு உன் இதழ் சேர்த்து
உன் எச்சிலெனும் அமிர்தம் தந்தாய்...

பசி எங்கோ  பறந்து போனது
நம் இதழ்கள் மட்டும் இணைந்தே இருந்தது.....

Monday, 8 October 2012

கிறுக்கன்

உன் கண்கள்
உறக்கமின்றி தவிக்கிறது...

உன் உதடு
வரண்டு வாடுகிறது...

உன் உடல்
சோர்வால் வலிக்கிறது...

நான் வந்தால்
இது மாறுமெனக்கூறினாய்...

நானும் வந்தேன்
ஏன் மாறவில்லை???

அடே கிறுக்கா...
மாறுமென்றா கூறினேன்...??

உன் விழிப்பார்வை
போதும் எனக்கு...

உன் இதழ்சுவை
போதும் எனக்கு..

உன் உடல் ஸ்பரிசம்
போதும் எனக்கு....

எனக்கென நீ
இருக்கிறாய் அதுபோதும்

என்றாய்-ஏனோ
நான் எட்டிவந்தேன்...

கடைசிக் குருதி
வெளியேறும் வலியறியாமல்....

கவிதை

கவிதை எழுதலாமென
பேனா எடுத்தேன்...

நீ என்னிடம்
கட்டளையிட்டாய்....

முதல் வரியும்
கடைசி வரியும்
ஒன்றாக இருக்கவேண்டும்,

சரி,அடுத்து??
எரிச்சலாய் கேட்டேன்...

வரிக்கு
இரண்டு வார்த்தை,

மொத்தம்
மூன்று வரி,

சரி
இன்னும்??

முதலும் கடைசியும்
ஒன்றாக இருக்கவேண்டும்,

இன்னும் உண்டோ??
வார்த்தை தடித்து...

  என்னை பற்றி
இருக்கவேண்டும்...

அவ்வளவு தானா??
இறுக்கம் தணிந்து...

என்னழகை புகழக்கூடாது
காதல் கூடாது,

ஹம் இதென்ன பிரமாதம்
மனம் குதூகலித்தது...

கைகள் பேனாவைப்பற்ற
மனம் அவளுள் லயிக்க...

''நீயும் நானும்
.
.
.
.
.
நம் வாழ்க்கை
.
.
.
.
.
நீயும் நானும் ''

கவிதை முடிந்ததென
நினைத்த பொழுது ...

''என்னை கட்டியணைத்து
  நம் இதழ்
  சேர முத்தமிட்டாய்...''

இன்னுமெரு கவிதையாக....

Saturday, 6 October 2012

மச்சம்

உன் மாரென்னும் மலைக்கிடங்கின் வழியே
என் பார்வையென்னும் வெள்ளம் பாய்த்திட்டேன்

கங்கையாய் வழிந்த விழியருவி...
சின்னதொரு மருவினால் அசையாமல்
கட்டுற்று நின்றதுவோ??!!

மருங்குன்றோ?? அதனடியில் என்

உயிர்குடிக்கும் இராட்சதனோ???
கரும் பொட்டோ???

சூராவளியின் நடுவிசையோ??
அண்டத்தின் மையக்கருவோ??
என பலவற்றை உன்னிடம்
கேட்டால்...

இன்னுமிருக்கிறது
காண்பாயோ?? கண்டு மீள்வாயோ??
என பகடி செய்கிறாய்...

உன் சிறுவிழிப்பார்வை போதும்
என் உயிர்குடிக்க...நீ அறிவாய்..
நான் யாரென்று..நாம் யாரென்று....♥ ♥ ♥

Thursday, 4 October 2012

நான்

என்னுள் நான்
நானாக இருப்பதால்
என்னை நானாக தேடுவேன்...
எனக்கு கடவுள் எதற்கு??

என்னுள் நான்
தனியாக நானோ???
நாம் என்று அவனுரைத்தால்

அவன் கடவுளா???

என்னுள் நான்
நாத்தீகன் இல்லை..
ஆத்தீகன் இல்லை..
பகுத்தறிவாளன் இல்லை..

என்னுள் நான்
நானாக நான்...
என்றும் நான்.....
நான் நானாக..............நீ கடவுளாக

நீ கண் சிமிட்டும் நேரம்

நீ கண் சிமிட்டும் நேரம்
கண்களில் முத்தமிடுவேன்....

நீயும் நில்லாமல்
சிமிட்டிக்கொண்டிருக்கிறாய்...

நான் முத்தமிட வேண்டும் என்பதாலா??
இல்லை- என்
முத்தத்தால் வரும் படபடப்பா??? ♥♥♥♥♥

இதுவும் கடந்துபோகும்

இதுவும் கடந்துபோகும்
உன் அழுகையோடு...

இதுவும் மாறிவிடும்
உன் சிரிப்போடு...

இதுவும் சிறப்பாகும்
உன் மகிழ்ச்சியோடு...

எது கடந்தாலும்,

மாறினாலும்,சிறந்தாலும்....

நீ மட்டும் இருப்பாய்
உன் நினைவாய் என்னுள்...

கண்கள்

உன் கண்கள்
வேறெங்கோ பார்க்கிறது...
உன்னை அழைத்தும்
சட்டை செய்யாமல்....

சரி,

உன் கண்களுடன்
நானும் பார்க்கிறேன்
அதன் வழிநோக்கி....
சுற்றிலும் கிட்டவில்லை

அதன் திசை யாதென
குழம்பி நின்றேன்
இருவருக்கும் ஒருபார்வை
தானே எனச்சிரித்தாய்...

நீ.....

தெருவோரம் எவ்வித
சலனமும் இல்லாமல்
நீ....

தெருவின் மொத்த
குப்பையும் உறவுகொள்ளும்
உன் ஆடை.....

அக்கந்தல் ஆடையிலும்
அறியாமல் மறைந்திருக்கும்
உன் மானம்...

ஊரே இலக்கில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்
அவர்களுக்கு நேரெதிரில் நாய்கள் துரத்த ஓடும்
நீ....

உனக்கென ஓர் உலகம் உண்டு
ஆயினும் இவ்வுலகின் அடிமை
நீ...

உனக்குள் பேசி உனக்குள் சிரித்து
யாரையோ விரட்டி யாரையோ தேடி அலைகிறாய்
நீ....

தேவர்கள் போல் இம்மண்ணுலகில் ஓர் வாழ்கை
அவ்விண்ணுலகில் ஓர் வாழ்க்கையென வாழ்கிறாய்
நீ...

ஆணாக இருப்பின்
உன் வாழ்கை வாழ்வது
நீ மட்டுமே...

பெண்ணாக இருந்தால்
உன் வாழ்கையை வாழ்வது கயவர்களும்
நீயும்......

கடவுளை அடையும் படியில்
இடறியதால் இவ்வாழ்கை வாழ்கிறாய்
நீ....?????

நீ....நீயாக வாழ்கிறாய்
மனம் கழன்று என்றும் அப்பெயருடன்
நீ......

Monday, 1 October 2012

தமிழ்

தாய் தமிழ் உன்னிடம்
ததிங்கினத்தோம் போடுகிறது..

ஆயினும் உன் தமிழ்
அழகானது.-அதனுள்

சுமந்திருக்கும் நம் காதலையும்
உன் விடாமுயற்சியையும்
நான் எவ்வாறு விட்டுவிடுவது???

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தான்
பாண்டிய மாமன்னன்...

தமிழினால் தன் குடும்பம் வளர்க்கின்றனர்
இங்கு சிலர்...

நீ என்ன செய்தாய்??
உன் காதலை வெளிப்படுத்தும்

கருவியாய் உருவித்தாய்...
கருவரையின் சுகம் பெற்றேன்-உன்

தமிழைக்கேட்கும் பொழுது.தமிழினி
மெல்ல வாழும் ♥

Sunday, 30 September 2012

''ஙே...ஙே..''

'' ஐ லவ் யூ ''

''ஐ லவ் யூ டூ''

'' என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?? ''

''இப்பவே பண்ணிக்கட்டுமா??''

''ஹம் சரி''

'' ரெண்டு வீட்டு சம்மதத்தோட பண்ணிக்குறேன்''

''சரி.....................ஹேய் கல்யாணத்துக்கப்புறம் இதே மாதிரி கவிதை

எழுதுவியா?? ''

'' ஓ...ஷூர்...''

'' உனக்கு எத்தனை குழந்தை வேணும்?? ''

'' முதல்ல ஒரு பொண்ணு அப்புறம் பையன்''இத்தோட

நிறுத்திருக்கலாம்...சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம்

ஆண்டிங்கிற மாதிரி...

''நம்ம பொண்ணு பிறந்ததுக்கப்புறம் அவளுக்கு மட்டும் அவளோட

ஒவ்வொரு  அசைவுக்கும் கவிதை எழுதுவேன்.....''

'' அவளுக்கு மட்டும் தானா?? அப்போ என்ன அம்பேல்னு

விட்டுடுவியா?? ''

''நா அப்படி சொல்லல...''

''என்ன அப்படி சொல்லல இப்படி சொல்லலனு சமாளிக்குற?? ஒழுங்கா

உனமைய சொல்லு??''

"ஙே ஙே"

'' என்ன முழிக்குற??''

''ஹேய் இல்லடா இப்போ நா வெளில போய்ட்டு ஆத்துக்கு வந்தா..நம்ம

பொண்ணுக்கு toys  வாங்கின்டு வந்தா அதுலயும் உனக்கு வாங்கின்டு

வரனுமா???'' சமாளிக்குறாராமாம்... ;)

'' சரி பொண்ணுக்கு மட்டும் தானா??? அப்போ எனக்கும் என்

பையனுக்கும் இல்லையா???

''ஙே..ஙே..''

'' என்ன முழிக்குற சொல்லு??''

''ஹேய் அது எப்படி வாங்கின்டு வராம இருப்பேனா??? அசடு..''

''அது என்னடா எப்ப பார்த்தாலும் பொண்ணு பொண்ணுனு தலைல

தூக்கி வச்சின்டு ஆடற?? அப்போ எதுக்கு பையன் வேணும் உனக்கு???

என்னைக்கா இருந்தாலும் அடுத்தவனாத்துக்கு போரவள ஏன்டா இந்த

கொஞ்சு கொஞ்சரே வேணும்னா வீட்டோட மாப்பிள்ள பார்த்து கட்டி

கொடுத்துடுவ போல??''

ரோசம் வந்திடுச்சு ''ஆமா அப்படி தான் கட்டிகொடுப்பேன்''

''உனக்கும்...உன் பொண்ணு மாப்பிளைக்கும் வடிச்சு கொட்டதான் நான்

இருக்கேன் பாரு?? போ..நான் என் பையன் கூட போறேன் போடா...''


''ஙே...ஙே..''

''எனக்கு மட்டும் தான் நீயும் உன் கவிதையும் உன் பொண்ணுக்கு கூட

கிடையாது...அவளுக்கு நீ எழுதறதா இருந்த எழுதி என்ட தான் தரனும்

எக்காரணம் கொண்டும் என்னுரிமையை விட்டுதர முடியாது''

'' சரி வா...இப்போ எதுக்கு இதை பத்தி பேசுற?? விடு அப்புறமா

பார்த்துக்கலாம்'' முன்னெற்றியில் முத்தமிட்டான்..

''டேய் கேடி உன்ன பத்தி தெரியும் டா எனக்கு..''

''என்ன தெரியும் ?? ''

''வெவ்வவ்வவ...சொல்லமாட்டேனே...''

'' டிரெயின் வந்திடுத்து...வா கிளம்பலாம்''

'' இரு உன்ட ஒன்னு கேட்கனும்''

'' என்ன??''

''உனக்கு நான் தானே எல்லாம்?? ''

'' அசடு...''

'' என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?? ''

'' உன்ன விட்ட என்னை எவ கட்டிப்பா சொல்லு??''

'' ஐய்யோடா....உன்ன தெரியும் டா கேடி ''

''ஙே...ஙே..''

Wednesday, 26 September 2012

குடும்பம்

வேலை காரணமாக இரு நாட்கள் வெளியூர் சென்று

ஊர் திரும்பும் வருண்  மனதில் 2 வயது மகனின் நினைவுகளே

நிரம்பி இருந்தது...

அப்பாவென அவன் மழலையில் அழைக்கும் சந்தமும்,

அவனை கட்டித்தழுவும் பொழுது அவனின் ஸ்பரிசதமும்,

இன்னும் பால் மனம் மாறாத அவனுடல் வாசமும்

அவனை சிலிர்ப்புறச்செய்த்தது.

இன்னும் வேகமாய் பயணித்தான் வீடு நோக்கி....

வீட்டின் கதவை ஆசையாய் தட்டினான் மணி இரவு 11...

உள்ளிருந்து அவன் மனைவி கண்களில் உறக்கம் சொக்க கதவை திறந்தாள்...

அவளிடம் வாங்கிய பைகள் திணித்துவிட்டு கண்களால் வீட்டை

சல்லடையிட்டான்..நேராக படுக்கை அறையினுள் நுழைந்து மகன் தூங்கும்

அழகை ரசித்தவாறே அவன் நெற்றியில் முத்தமிட்டான்...

அம்முத்தத்தின் உணர்வில் முழித்தெழுந்து அப்பாவென இருக்க

கட்டிக்கொண்டான்...அன்றிரவு முழுவதும் குழந்தையாய் மாறி மகனுடன்

தானும் உறங்கிப்போனான்...அவன் தோளில் அவன் மனைவி முகம்

பதித்து உறங்கினாள்....

தொடரும் தேடல்

இன்று திரைப்படம் பார்க்கலாம் என்று சற்று சீக்கிரமாக  

கிளம்பிவிட்டேன்...எப்பொழுதும் நேர் வழியில் அம்பை

செல்லும் பேருந்தில் ஏறாமல் ஊர் சுற்றிப்போகும்

பேருந்தில் ஏறினேன் நகரப்பேருந்தென்றாலும் கட்டணம் அதிகம்...

நடத்துனரிடம் ''அம்பை ஒன்னு'' என்று 10 ரூபாய் கொடுத்தேன்

என்னை விசித்திரமாக பார்த்து  '' சார்வாள் இது ஊர் சுத்திப்போகும்

அடுத்த பஸ் பின்னாடியே வரும் அதுல வரலாம்ல???''

நான் சிரித்துக்கொண்டே ''சரி பரவாயில்லை ஏறிட்டம்ல கொடுங்க

உங்களுக்கு பிடிக்கலனா இறங்கிடுதேன்'' கஷ்டப்பட்டு அக்ரஹாரத்தமிழை

மறைத்தேன்....

நடத்துனர் ''என்ன இப்புடி சொல்லிட்டீக நீங்க ஏதோ அவசர சோலியா

போரீங்கனு நினைச்சுதான் கேட்டேன்....இந்தாங்க டிக்கட்டு உள்ள ஏறி

உக்காருங்க''

ஏறி நேராக நடத்துனர் இருக்கையின் சன்னலோரம்  அமர்ந்தேன் எனக்கு

பிடித்த இடம்...

நெல்லை மாவட்டத்தை மழைக்காலங்களில் சுற்றுவதைவிட இவ்வாறு

சூரியன் வாட்டி எடுக்கும் காலங்களில் சுற்றுவது அழகானது....ஏனோ

தெரியவில்லை மக்களோடு பயணிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி

சொல்லிலடங்காது....இன்று சிறிதளவு பொருளாதர முன்னேற்றம்?! அடைந்த

பொழுதிலும் அவர்களிடம் ஊரிப்போன மரபும் கலாச்சாரமும் பிரம்மிக்க

வைக்கிறது...


எனக்கு முன் இருக்கயில்  இரு பள்ளி மாணவர்கள்

விளையாடிக்கொண்டிருந்தார்கள்..முக ஜாடை அண்ணன் தம்பியென

சுட்டியது....

அண்ணன் தம்பியிடம் ''ஏலே வீடு பத்தியெரியுது வாடா திருடா''

தம்பி ''வரமாட்டேன் போடா''

''அம்மா கூப்பிடுவாங்க வாடா திருடா''

''வரமாட்டேன் போடா''

''ஐஸ்கிரீம் வாங்கிதறேன் வாடா திருடா''

''வரமாட்டேன் போடா''

''குர்குரே வாங்கி தாறேன் வாடா ''

''வரமாட்டேன் போடா''

''பரோட்டாவும் சால்னாவும் வாங்கித்தறேன் வாடா திருடா''

''வரமாட்டேன் போடா''

அதற்குள் அவர்கள் நிறுத்தம் வந்தது எழுந்து இறங்கியவாரே அண்ணன்

 ஒவ்வொன்றாய் வாங்கித்தருவதாக வரச்சொல்லிக்கொண்டிருப்பான்...

என் மனம் இவன் திருடா என்றழைக்காமல் தம்பி என்றழைத்திருந்தால்

 வந்திருப்பானோ என்று தோன்றியது அதைவிட இதே மாதிரியாக

ஆதிச்சநல்லூர் பழந்தமிழ் நாகரீக காலத்தில் எம்மாதிரியான

விளையாட்டுக்கள் இருந்திருக்குமென என்னவோட்டம் சரியான பதில்

கிடைத்தால் வரலாற்றுப் பதிவாக்க முடியுமா என்ற நப்பாசை மனதினுள்

எழுந்தது.....பழங்கால பதிவுகள் கிட்டாத பொழுது உண்டாகும் வலி

கொடியது...தேடல் இன்னும் தொடரும் என் கடைக்காலம் வரை அது

முடியாது போனாலும் சமகால வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு

எடுத்துச்செலவதில் உறுதியாய் உள்ளேன்...

தேடல் தொடரும் என் அந்திம பயணம் வரை...

Tuesday, 25 September 2012

என் முதல் படைப்பு....

 இது என் 6 வகுப்பில் கிறுக்கியது இன்று வரை அதே எழுத்து நடை தான்

உள்ளது....சுவாரசியத்திற்காக சிறு மாறுதலுடன்....

இதை வாசித்து '' inception...transformers "" போன்ற படத்தின்

பாதிப்பென்று சொல்ல முடியாது ஏனென்றால் அப்பொழுது எனக்கு

தெரிந்த ஆங்கில படங்கள் ""jurassic park,deep blue sea,""

மட்டுமே.........
--------------------------------------------------------------------

 
மனோவின் அம்மா அவனை வேகமாக எழுப்பினார்....

திடுக்கிட்டு எழுந்தவன்  என்ன மா என்னாச்சு??? என்றான்....

அம்மா ''உடனே நாம தாத்தா ஊருக்கு போகனும் இங்க இருக்க கூடாது''

என்றாள்.

எதுக்குமா போகனும் என்னாச்சு?? இன்னைக்கு இராத்திரி டீவில பாப்பாய்

ஷோ பாக்கனும்

''அதுலா அங்க போய் பார்த்துக்கோ...முதல்ல கிளம்பு''

அவர்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு கிளம்ப தயாராயினர்...

''அம்மா வெளியில என்ன மா சத்தம்???''

''காதை பொத்திக்கோ ஒன்னுமில்லை...பயப்பிடாத அம்மா இருக்கேன்''

''ஹம் சரி''

இருவரும் நடக்க தொடங்கினர்...

எங்கும் வெடி சத்தம் எல்லாமும் அழிந்துவிட்டது....எல்லா வாகனங்களும்

ராட்சத உருவமெடுத்து ஒவ்வொறுவராய் அழிக்கின்றது....

கையை பிடித்துக்கொண்டிருந்த அம்மாவை காணவில்லை....

இவன் விசித்திர உருவம் பெற்று அவ்வரக்கர்களிடம் சண்டை

போட்டுக்கொண்டிருக்கிறான்..

அனைத்தும் முடிந்தது இவன் மட்டும் உயிருடன் இருக்கிறான்...

சடாரென யாரோ அழைப்பது போல் உள்ளது அவன் அம்மா அவனிடம்...

மனோ சீக்கிரம் எழுந்திட்றா தாத்தா வீட்டுக்கு போகனும் என்று

அடுக்களையிலிருந்து

கத்திக்கொண்டிருந்தார்...

''எல்லாம் கனவா?? ச்ச....பயந்துட்டேன்''என்று கூறியவாரு அம்மாவை நோக்கி
நகர்ந்தான்

Saturday, 22 September 2012

தேடல்

சற்று விசித்திரமான தேடலுள்ளவன் நான்...

அவ்வகையில் முல்லை தமிழ் மனக்கும் நெல்லையில்

இன்று வரை அவர்களை அறியாமலே அவர்கள் சேர்த்துவைத்திருக்கும்

பழந்தமிழ் சொற்றொடர்களில் நான் கண்டு வியந்தவை சில....

1)கொண்டி - கதவின் தாழ்பாள்

பெயர் காரணம்- இங்கு அமைந்திருக்கும் கதவுகளின் அமைப்பை பொருத்து கூப்பிடும் வழக்காடுஞ்சொல்

2)வாரியள் - துடைப்பம்,விளக்குமாறு...

பெயர் காரணம்- வீட்டில் உள்ள குப்பைகளை வாரி அள்ள பயன்படுவதால் வாரி+அள்ளுதல் மறுவியது..

இன்று இடம்பெயர்ந்த இலங்கை தமிழர்களிடம் வழக்கிலுள்ளது..

3)கோட்டி -பைத்தியம்|லூசு

பெயர் காரணம்- கோணலான மூளை கொண்டவன்..

4)பைய - மெதுவாக

பெயர் காரணம் - திருஞானசம்பந்தரால் தருவிக்கப்பட்டது...இன்று நெல்லை மதுரை பகுதிகளிலுள்ளது..

5) ஏனம் - பாத்திரம்

பெயர் காரணம் - ஒரு பொருளை ஏந்திச்செல்ல பயன்படுவது...

6)சாரம் -லுங்கி| கையிலி

பெயர் காரணம் - சரியான காரணம் தெரியவில்லை விசாரித்தவரை வேடிக்கையாக ஒருவர் கூறியது

எதையும் சார்ந்திராமல் ப்ரீயா இருக்க உதவுவது...

7) கல்கோனா -மிட்டாய் வகை

பெயர் காரணம்- கல்லைப்போன்று கடினமாக இருக்கும்...

8)சோலி - வேலை

பெயர் காரணம் - தெரியவில்லை தேடிக்கொண்டிருக்கிறேன் ஆனால் மலையாளத்தில் 'ஜோலி'எனக்கூறுவார்கள்

9) குச்சி - பல்பம்

பெயர் காரணம்- ஒல்லியாக இருப்பதால் குச்சி என்றே நிலைத்தது...

இன்னும் பல வார்த்தைகள் நியாபகமில்லை...

கெட்டவார்த்தையில் கூட பழந்தமிழ் விளையாடும் சபை நாகரீகம் கருதி எழுதவில்லை

முத்தாய்ப்பாக நான் இருக்கும் கிராமத்தின் பெயர்

அடைச்சாணி - அடைத்த காணி (எல்லாப்பக்கங்களிலும் வயல்வெளி அடைத்திருக்கும்)

என்பது மருவி அடைச்சாணி என்றானது

மற்ற திராவிட|வட மொழிகளுக்கு நம் தமிழ் அளித்த வார்த்தைகள் மற்றை தேசத்தில் மருவி வழக்கிலுள்ள

தமிற்சொற்களைப் பற்றி இன்னும் விரிவாக எழுத ஆசையாக உள்ளது..

Friday, 21 September 2012

1.50



அம்மா தன் பத்து வயது மகனிடம் ''ஏலே கார் வந்திடுச்சு ஒழுங்கா 3வது

ஸ்டாப்புல இறங்கு  பஸ் ஸ்டான்ட் பக்கத்துல ஒரு புளியமரம் இறுக்கும்

அதான் அடையாளம்.....நேரா கிழக்கால நடந்தனா ஆச்சி வீடு தெரியும்

ஆச்சிட்ட இந்த ஏனத்த  ( தூக்குச்சட்டி) கொடுல இதுல அவுகளுக்கு

பிடிச்ச முறுக்கும் அதிரசமும் இருக்கு....உனக்கு வேணும்னா   இரண்டு

எடுத்து வாய்ல போட்டுக்க..இந்தா டிக்கட்டுக்கு 5 ரூபா மிச்சத்த

பத்திரமா வெச்சிக்க உங்கய்யா கருக்கல்ல வந்து கூட்டிட்டு போவாரு....

டிக்கட்டு 3.50 அப்போ மிச்சம் 1.50 அண்ணாச்சி கடையில கல்கோனாவும்,தேன்

மிட்டாயும் வாங்கலாம் அம்மா மிச்சத்தை கேட்க மாட்டா...என்று மனதினுள் குதூகளித்தான்


அம்மா அவனருகிள் தொடர்ந்தவளாக '' தாத்தா பாட்டிய படுத்தாத..அவுகட்ட அது வேணும் இது வேணும்னு தொந்திரவு கொடுக்காதல...

புரிஞ்சதால???? உங்கப்பன மாதிரியே முழிக்காத....பாத்து போய்டுவால சரியா???

மகன் அனைத்தையும் கேட்டவாறே ''யம்மா சும்மா உசுர வாங்காத உன் சோலிய பாரு

நடவைக்கு ஆட்கள் போராங்க போ...'' என்று எரிச்சலானான்

பேருந்து நிறுத்ததில் வந்து நின்றது....

அம்மா நடத்துனரிடம் ''யண்ணாச்சி இவுன எங்க ஊர்ல இறக்கி விட்டிடுதீயலா??

மறக்காம பாக்கி சில்லறையக் கொடுங்க...''

நடத்துனர் இவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ''ரைட் ரைட் என்று கூவினார்''

அச்சிறுவன் கையிலிருந்த 5 ரூபாய் நோட்டைக்கொடுத்தான்...

நடத்துனர் ''ஏலே இந்தா சீட்டை பிடி மிச்சம் 1.50 இறங்கும் போது தரேன் நீ அந்த காலியான

சீட்டுல உக்காரு...''

கூட்டமில்லாத மதிய வேலை ஆதலால் இவனுக்கு உட்கார இடமும் கிடைத்தது

ஜன்னலோரம் வேடிக்கைப்பார்த்தவாறு அவ்வப்பொழுது சீட்டின் இடுக்கு வழியாக

நடத்துனரை பார்த்துக்கொண்டிருந்தான்...

அவன் மனதில் மிச்சத்தை தராமல் போய்விட்டால் அப்புறம் அண்ணாச்சி கடையில

தேன்மிட்டாயும் கல்கோனாவும் எப்புடி வாங்குறது என்ற எண்ண அலைகள் அவனைச்

சிதரடித்தன....மனதில் அழுகை பெருக்கெடுத்தது....மனம் கொள்ளாமல் கேட்டும் விட்டான்

''சார்வால் அடுத்த ஸ்டாபிங்கு எங்க பாட்டி ஊரு''

நடத்துனர் ''உம் தெரியும் டே இதே ரூட்டுல தான்டே நீ பிறக்குரதுக்கு முன்னாடில இருந்து

ஓடிட்டு இருக்கேன் எனக்கே சொல்லித்தரியால?? ''

சிறிது அமைதி காத்தவனாய் மீண்டும்...

''சார்வால்''என்று பம்மி அழைத்தான்...

நடத்துனர் எரிச்சலாக ''என்னல வேணும் ஒனக்கு ஒழுங்க கணக்க பாக்க விடுதியா??'' என்று கத்தினார்

இவனும் சிறிது மென்மையாக ''மிச்ச சில்லற 1.50'' என தயக்கத்துடன் கேட்டான்

'' செவத்த மூதி உங்காச கொண்டுபோய் கோபுரமால கட்ட போரேன்?? இரு தரேன்'' என்று உச்சஸ்தாயில் கத்தினார்...

இவனுக்கு அழுகையே வந்துவிட்டது..

இறங்கும் முன் இந்தா மூதி உன் காசு இத நா என்ன முழுங்கவா போறேன் என்று செல்லமாக

அவன் கன்னத்தில் தட்டி கையில் தினித்தார்..

இவனும் மகிழ்ச்சிப்பீறிடுக்க இருக்கமாக அக்காசுகளை பிடித்துக்கொண்டான்....

நடத்துனர் அடித்த ஒற்றை விசிலில் கிரிச்சென்று நின்றது பேருந்து....

இவனும் தடி அகற்றிய கன்று போல அண்ணாச்சி கடை நோக்கி ஓடத்துவங்கினான்....

காதலிக்க நேரமுண்டு -2

அமைதியாய் டீவியில் மூழ்கிய ரகுவை விசித்திரமாக
 பார்த்துக்கொண்டிருந்தாள் லக்ஸா...

அங்கு வந்த பவி ( மிதுனின் காதலி,லக்ஸாவின் உயிர்த்தோழி) இவளை
 பார்த்து சற்று செறுமியபடி....
''  வந்ததுல இருந்து அவனையே பார்த்திட்டு இருக்க ஏதாவது ரசாயன மாற்றமா??? '' என்று கண் அடித்தபடி அவளருகில் அமர்ந்தாள்..

லக்ஸா நினைவு திரும்பியவளாக '' இல்ல டா வார்த்தைய வைத்தே ஊர சொல்ரான் சம் திங் மிஸரில???'
பவி : "நானும் மிதுன்ட இவனை பத்தி இப்போ தான் கேட்டேன் டி...கொஞ்சம் வித்தியாசமானவனாம் யாரிடமும் ஈஸியா பழக மாட்டானாம் கிட்டத்தட்ட ஒரு சைக்கோ...."

லக்ஸா : சரி நான் இங்க வந்து ரொம்ப நாள் ஆகுது எனக்கு ஒரு தனி சிம் கார்ட் கிடைக்குமா???

பவி : இரு மிதுன்ட கேட்குறேன்...மிதுன் இங்க வாடா....

மிதுன்  உள்ளிருந்து வந்தான்..''.கியா ஹே???'' என்று செல்லமாக அவள் முதுகில் தட்டினான்...

பவி : இவளுக்கு சிம்கார்ட் வேணுமாம் டா உன் ஐடில வாங்கி கொடு.டா

மிதுன் ரகுவை நோக்கி '' மச்சி ஒரு சிம் கார்ட் வேணும்  டா... முடியுமா?? ''
ரகு ''ஐடி ஃப்ரூப்....போட்டோ??? ''

லக்ஸா : '' டுட் எனக்காக இது கூட பண்ண மாட்டியா?? நானும் உனக்கு பிரண்டு தானே?? ''

ரகு சற்று யோசித்தவாறு தன் பையிலிருந்து ஒரு பிலாஸ்டிக் கவரை எடுத்து அதிலுள்ள சில சிம்கார்டுகளை எடுத்து கொட்டி அதிலிருந்து ஒரு சிம்மை மட்டுமெடுத்து அவளிடம் நீட்டினான் ''இது எனக்கு பிடிச்ச நம்பர்..... பிரண்டுனு சொன்னதால வச்சுக்கோ...''

பவி : ''இத்தனை சிம் வச்சிருக்க நீ என்ன தீவிரவாதியா???''
ரகு அவளை சட்டை செய்யாமல் மற்ற சிம்கார்டுகளை மீண்டும் பையில் போட்டான்

லக்ஸா : '' தேங்க்ஸ் டுட்'' ரகு அதை காதில் வாங்காமல் சமயலரையில் உள்ள குடத்தை தூக்கி ஒரே மடக்காக தண்ணீர் குடிப்பதை அனைவரும் விசித்திரமாக பார்த்தார்கள்

ரகு மிதுனிடம் '' டேய் டைம் ஆச்சு தூக்கம் வருது என்ன பண்ண போற???''

மிதுன் '' மச்சி நாங்க ரெண்டுபேரும் ரூமுக்கு போறோம் கெஸ்ட் ரூம்ல லகஸா படுக்கட்டும் நீ சோபால படுத்துக்கோடா...பிளீஸ்''

இடைமறித்த லக்ஸா ''டுட் நோ பிரபலம் நீ கூட பெட் ஸேர் பண்ணிக்கோ நோ அப்ஜக்ஸன்'' ..

ரகு '' பரவா இல்லை நான் இங்கயே படுத்துக்குறேன்''

லக்ஸா '' அப்போ நானும் இங்க படுத்துக்குறேன் நீ என்ன கடிச்சு முழுங்கவா போற??? ''

ரகு :'' அது உன் இஷ்டம்''

 இருவரும் டீவியில் மூழ்கி்னர்...மணி இரவு 11 எட்டியது இருவருக்கும் உறக்கம் கண்ணை சொருகியது...அவள் அவனை பிறந்த குழந்தையை தாய் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தாள்...அவன் அவளை பார்தத பொழுது தலையை திருப்பி கொண்டாள் இவனும் அவளை சட்டை செய்யாமல் சமயலறை நோக்கிச்சென்றான்... கதவின் முன்பு நின்று பின்னால் திரும்பி சற்று நிதானமாக ''லக்ஸா காஃபி வேணுமா??? ''என்றான்...

திடுக்கிட்ட லக்ஸா 'இரவு தூங்கும் முன் காஃபியா??'என்று விளித்தாவாரு வேண்டாமென்று கூறுமுன் அவ்விடத்தைவிட்டு நகன்று சமயலறையினுள்
மறைந்தான்...

இவளும் அவ்விடத்திலேயே உறங்கத்தொடங்கினாள்....உள்ளிருந்து காஃபி குவளையுடன் வந்த ரகு குவளையை வைத்துவிட்டு அவளை ஒழுங்காக படுக்க வைக்க அருகில் வந்தான் எழுப்புவதா?? இல்லை தானே நகற்றுவதா?? என்ற  குழப்பத்தில் அவளருகில் கையை கொண்டு சென்றான்...

சற்றென்று விழித்தவளாய் அவன் கண்களை இமைக்காகமல் பார்த்துக்கொண்டிருந்தாள் என்ன செய்வதென்று தெரியாமல் ரகு '' கொஞ்சம் ஒழுங்கா படுத்துக்கோ...கீழ விழுந்திடாத'' எனக்கூறிவாரே தரையில் படுத்துறங்கினான்....

 இவளும் உள்ளுக்குள் காதலெனும் கயவன் விழித்தெழுவது தெரியாமல் உறங்கினாள்......

நேரம் வளரும்.....

Wednesday, 19 September 2012

காதலிக்க நேரமுண்டு


இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உன்மையே....ஒரு சில காரணங்களால் பெயர்,இடம் மாற்றப்பட்டுள்ளது...

பகுதி 1
---------

கிராமத்திலிருந்து பல கனவுகளுடன்?! ரகு படிப்பதற்காக சென்னை வந்தடைந்தான் ஒருவாராக ஓராண்டு காலம் உருண்டோடியது..

அவனும் தட்டுதடுமாறி பல போராட்டங்களுக்கு பிறகு இவனுக்கென்று ஒரு சில  நண்பர்களை கண்டெடுத்தான்.

அவர்களும் நமக்கு போரடிக்கும் பொழுது இவனை யுஸ் பண்ணிக்கலாமென்று இனைத்துக்கொண்டனர்..

சரியாக ஒரு வெள்ளிக்கிழமை மதியம் வகுப்பிலிருக்கும் பொழுது ஒரு குறுந்தகவல்.
." machi come 2 our meeting spot soon after clge one surprise for u "

அவனும் பாதி வகுப்பில் ஆட்டய போட்டுட்டு நண்பனை பார்க்க சென்றான்.....

அவனது நண்பன் மிதுன் என்றுமில்லாமல் அன்று  அழகாக வந்தான்

ரகு : டேய் வாட் இஸ் திஸ்?? என்ன சர்ப்பரைஸ்...????

மிதுன் : வண்டில உட்காரு சொல்லரேன்...

ரகு : இப்போ எங்க என்ன கூட்டிட்டு போற???

மிதுன் : வா பார்க்க தான போற,,,,,,முதல்ல இந்த மொக்க சட்டைய மாத்து பின்னாடி  டீ ஷர்ட் இருக்கு...அத போட்டுக்கோ...

ரகு : சரி...டா என்ன விசயம்னு சொல்லு...

மிதுன : என் லவ்வர் எனக்கு ஓகே சொல்லிட்டா டா...அவள பார்க்க தான் போறோம்....

ரகு : அதுக்கு நா எதுக்குடா??? நம்ம தேஜூ, ஐஸு, கார்த்திக்.ஸ்வேதாலாம் எங்க???

மிதுன் : அவங்களாம் அங்க வந்திடுவாங்க உன்ன கூட்டிகிட்டு வரதுக்காக தான் நான் வெயிட் பண்றேன்...

ரகு :(கண்ணோரம் வந்த நீர்த்துளியை துடைத்து) congrats மச்சி....டிரீட் டா????

மிதுன் : ஆமா இவரு அப்படியே நாலு லார்ஜ் உள்ள விடுவாரு

ரகு : சரி டேமேஜ் பண்ணாத.....எங்கடா  போரோம்???? காபி டேவுக்கா??? இல்ல பப்புக்கா???

மிதுன் : இல்ல டா சிட்டி மாலுக்கு...
(ரகுவின் மனதில் பல எண்ணங்கள் ஓடியது....)

மிதுன் :  டேய் நா என் லவ்வர பார்க்க போறேன் நீ என்ன கனவு காணுற???
அவ பிரண்டு யாராவது இருந்தா இன்ட்ரோ பண்ண சொல்லறேன் ஆனா உன் கூட பழகுறதுக்கு யோசிப்பாலுக...உன் அப்ரோச்ச கொஞ்சம் மாத்தினா ஈஸியா மாட்டும் டா உனக்கு....

ரகு : அப்படி ஒரு ___________ தேவையில்லை...நீ வண்டிய பார்க் பண்ணிட்டு வா...நா இங்கயே நிக்குறேன்.....

இருவரும் உள்ளே சென்றனர்....ரகு  எப்பொழுதும் போல் மனிதர்களையும், அங்கிருக்கும் பொருட்களையும் நோட்டமிட்டபடி சென்றான்

அறிமுக படலம் முடிந்து அனைவரும் உணவருந்த அமரும் பொழுது... ஹீரோயின் (லக்ஸா) வந்தால்

"ஹேய் சாரி கைஸ்...லிட்டில் லேட்...இதுல யாரு மிதுன்???? ஹூ இஸ் தேட் லக்கி கை?? "

எல்லாரும் உடனே ரகுவை கைகாண்பித்தார்கள்....
லக்ஸா..."ஹூம் நாட் பேட் கங்கிராட்ஸ் டுட்...."

எல்லாரும் அவர்கள் இருவரைப்பார்த்து சிரித்தார்கள்...
ரகு எழுந்து நடந்தான்...

அவள் அவன் கையை பிடித்து 'சாரி டுட் ப்லீஸ் ரியலி சாரி'' அவன் கையை பிடிக்கும் முதல் வெளிப்பெண்...அவனுள் ஆயிரம் எண்ணங்கள் இமைப்பொழுதில் வந்து சென்றது....

ரகு :'' ஆர் யூ ஃபிரம்  ஆந்திரா ஹைட்????''

லக்ஸா : "யா...செகன்டிராபாத்...எப்படி கண்டுபிடிச்சே???' ' (தெலுங்கில் உரையாடல்)

ரகு : எனக்கு அது தானா வந்தது பேசுறத வைத்தே சில சமயம் கண்டுபிடிச்சிடுவேன்.....

மிதுன; ஹலோ குல்டீஸ் இங்க என்ன நடக்குது???

அவள் அவன் கையை விடுவித்து '' நத்திங்...''

அவள் அவனிடம் : '' மீ லக்ஸா...யூ??? ''

மிதுன் '' ஐ யாம் மிதுன், திஸ் இஸ் ரகு, தேஜூ, ஐஸு, கார்த்திக்.ஸ்வேதா''

லக்ஸா..:.'நைஸ் டூ மீட் யு கைஸ்''
அறிமுகப்படலம் முடிந்து அனைவரும் மிதுனின் இல்லத்திற்க்கு சென்றனர்...
ரகு அமைதியாய் டீவியில் மூழ்க தொடங்கினான்....லக்ஸா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்......


தொடரும்......

Saturday, 15 September 2012

கற்றது கசடு

இது சற்று விசித்திரமானதாக இருக்கலாம் ஆனால் நூறு சதவிகிதம் உண்மையானது.
இதை ஒரு தொடர்கதை போல எழுதாலாமென்றுள்ளேன்...

சிறு வயதில் எல்லோருக்கும் இவ்வகை நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும..
ஆம் நம் பெற்றோரே இவனிடம் பழகாதே,இக்குடும்பம்,
இச்சாதியினரிடம் பழகாதே எனக்கூறுவது இன்றுவரை தொடர்கிறது
அதுவும் பார்ப்பன குடும்பத்தில் பிறந்த என்னைப்போன்றவர்களுக்கு அதிகமுண்டு..

ஆனால் எனது வாழ்க்கையில் சற்று விசித்திரமாக நிகழ்ந்துள்ளது
என் அம்மா சுகாதாரச்செவிலியர் இங்கு ஆரம்பிக்கிறது முரண்...

''ஜாதிகள் இல்லையடி பாப்பா குல உயர்ச்சி,தாழ்ச்சி சொல்லுதல் பாவம்''
என்ற முண்டாசுக்கவிஞனை கண் முன் காட்டுபவர் ஆயினும் அவரது பிள்ளையாகிய நான் என் சாதி பிள்ளைகளுடனும் சற்று சாந்தமாக இருக்கும் ஜாதிப்பிள்ளைகளிடத்தில் மட்டுமே சேர வேண்டும் என கூறுபவர் என்னடா இடிக்கிறதென்று தோன்றுதா?? அதற்கான காரணம்
தொடரும் பதிவுகளில்....

சரி விசயத்திற்கு வருவோம் அம்மாவின் வேலை காரணமாக இந்திய தேசத்தின் கடைக்கோடி
மக்களின் வாழ்வை சிறுவயதிலேயே படிக்கும் பாக்கியசாலி நான்...

எழுத ஆரம்பித்தவுடன் ஒரு அதிர்ச்சி முரண் தரவேண்டாமா???

இதோ உங்களுக்காக ஒரு நிகழ்வு...

4 வகுப்பு முழு ஆண்டு விடுமுறை சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்ட நேரம் அம்மாவின்
ஹெர்குளீஸ் லேடி பேர்ட் சைக்கிளை எடுத்துக்கொண்டு மற்ற மேல் சாதி நண்பர்களுடன்
ஊர் சுற்ற கிளம்பியாயிற்று மொத்தம் 12 பேர் என்னையும் சேர்த்து..
எங்களூரில் சாதிவாரியாகதான் தெருக்கள் இருக்கும்..
கிராமத்தில் (பார்பன தெரு) தொடங்கி மூப்பனார்,செட்டியார்,வேளார் தெரு வழியாக
நாடார் தெருவைத்தொட்டு அங்கிருக்கும் நல்லி (குடிநீர் குழா)யில்  தாக சாந்தி செய்து  அடுத்த தெருவான பச்சேரி (அரிஜன தெரு)க்கு வண்டியை அழுத்தினால் சிலர் நாங்கள் வரவில்லை என்றுரைத்தனர் அவ்வாரே அந்த தெருக்களை கடந்து மற்றொரு தெருவிற்குள் நுழைந்தால் அங்கு மீண்டும் தாகமெடுத்தது அங்கு தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தவர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்டால் அம்பி நீங்களாம் இங்க தண்ணி குடிக்க கூடாது என்று கூறினார் முகத்திலடித்தார் போன்றிருந்தது...பார்பன்னாக ஏன் பிறந்தேன் ?? என்ற கேள்வி எழுந்தது...விடை தேடும் படலம் அன்று தொடங்கி இன்று வேறொரு பரிணாமத்தில் பயணிக்கிறது....அவற்றை கூறினால் எவ்வளவு மக்கள் ஏற்பார்களென்று தெரியவில்லை....ஹம்......பார்க்கலாம்....

கசடுகள் தொடரும்.....

Friday, 24 August 2012

''சொக்கா சொக்கா சோறுண்டோ??? சோழியன் வந்து கெடுத்தான் டே ''

எல்லோரது வாழ்விலும் கதை கேட்ட அனுபவங்கள் உண்டு...இன்றும்  கேட்டுக்கொண்டிருப்போம் அல்லது சொல்லிக்கொண்டிருப்போம் அதுபோல் சற்று விசித்திரமான கதை என் சிறுவயதில் என் தங்கை சாப்பிடுவதற்காக என் பெரியம்மா கூறுவார்..
இதோ அவர்களி்ன் கதை அவர்களின் பாணியில்
'' ஒரு ஊர்ல ஒரு அம்மாவும் பையனும் வாழ்ந்தாங்களாம்...அவங்க பையனுக்கு என்ன சாப்பாடு கொடுத்தாலும் உடம்புல ஒட்டவே இல்லயாம் அந்த சத்தெல்லாத்தயும் ஒரு பேய் எடுத்துக்கிச்சாம்....அதனால அவங்க அம்மா ஒரு ஜோசியன்ட கூட்டிட்டு போனாங்களாம் அந்த ஜோசியன் நடந்தத சோழி  போட்டு பார்த்துட்டு இனிமே புறவாச கதவை கொண்டிபோட்டுட்டு வீட்டுல விளக்கேத்திட்டு அப்புறமா சோறு கொடுனு சொல்லி அனுப்பினாராம்..அந்த அம்மாவும் அப்படியே செஞ்சாங்களாம் அந்த பேயும் ''சொக்கா சொக்கா சோறுண்டோ???  சோழியன் வந்து கெடுத்தான் டே '' னு வீட்டு பு்றத்துல இருந்து கத்திட்டே போ்யிடுச்சாம்''னு சொல்லி முடிக்கவும் கவளம் சாதம் காலியாகவும் சரியாக இருக்கும் நேற்று மாலை மின்சாரம் இல்லாத பொழுது என் தங்கை மீண்டும் சிறு பிள்ளையாய் கதை கேட்டாள் அதே உற்சாகம் தழும்ப....21 வயதாகியும் ஒல்லி பாச்சாவாய் இருக்கிறாள் ஒரு வேலை அந்த பேய் கதைகேட்ட இவளின் சத்துக்களை உரிஞ்சிருக்குமோ??? என்ற என்னம் என்னுள் வேடிக்கையாக வந்து போனது

Sunday, 19 August 2012

முத்தம் பிடிக்காது

ஒரு சில காரணங்களால் சில சம்பவங்கள் நம் மனதை விட்டு விலகாது...

                   ஹாக்கி விளையாட்டில் கை ஒடிந்து அவளை பார்க்க சென்ற பொழுது அவள் மனம் பட்ட அவஸ்தை இன்றும் நிழலாடுகிறது...அப்பொழுது தான் நாங்கள் இருவரும் தனிமையில் கழித்த இரவு ஒரு தாயாக என்னை கவனித்தாள்..
       இரவில் பெரும்பாலும் உடை அணிவதில்லை அன்றும் அவளே எந்த வித சலனமும் இல்லாமல் என்னருகில் அமர்ந்து தாலாட்டு பாடி உறங்க வைத்தாள்..
        காலை எழுந்த பொழுது என்னருகில் சிறு பிள்ளையைப்போல் உறங்கிக்கொண்டிருந்தாள்..காதலும் காமமும் வேறென புரிய வைத்தவள் அவள்..மிகச்சிறிய விவாதத்தை புதாகரமாக எடுத்துச்சென்று கடைசியில் ஒன்றுமில்லை என முத்தம் கொடுத்து முடிப்பவள்..
     பாதி நாட்கள் அவளது முத்தம் அவள் கண்ணத்தை வீங்க வைத்திருக்கிறது அப்பொழுதெல்லாம் எனக்கு முத்தம் பிடிக்காது சற்று விசித்திரமானவன் நான்....என்னை மனிதனாக்கி உணவு உட்கொள்ளும் முறைகளிலிருந்து உள்ளாடை வாங்குவது வரை கற்றுதந்தவள் அவள்.....
   எல்லா காதலர்களைப்போல நாங்களும் இரவில் நெறுக்கமாக பேசுபவர்கள் தான்..அவள் எனக்கு பல விசயங்களை கற்றுதந்தவள்...இருவரும் ஒன்றாக சங்கமிக்க பல வாய்ப்புகள் இருந்தும் அவளே வெளிப்படையாக கேட்டும் உள்ளுக்குள் ஆசை இருந்தும் நான் நிராகரித்தேன் இன்றுவரை அது ஏன் என்று தெரியவில்லை!!
     பல பெண்களை கடந்து வந்தாலும் அவள் மட்டும் சற்று விசித்திரமாக தெரிகிறாள் இன்றும் தாயாக,காதலியாக,தோழியாக,விரோதியாக,செவிலியாக பல பரிமானங்களைக்கொண்டு பெயரிர்க்கேற்றார் போல் மோகனமானவள்...

Friday, 17 August 2012

இது தானாமா உன் டக்கு ???

இரண்டு வாரங்களுக்கு முன்பு தொல்லியல் மற்றும் மொழியியல் தொடர்பாக துழாவிக்கொண்டிருந்த பொழுது அம்மா என் அருகில் அமர்ந்து பேச்சு கொடுத்தார்கள்...வேலைக்கு செல்லாமல் வெட்டியாக இருப்பதாக அழுத்துக்கொண்டர்...பேச்சு  செல்ல செல்ல என் பள்ளி காலங்களில் வீட்டிற்கு தெரியாமல் மொட்டை மாடி ஓட்டுப்பிறையில் நான் 6,7,8 ஆம் வகுப்புகளில் யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த ஆய்வகம் அதில் நான் தயார் செய்திருந்த அமிலங்கள் இன்ன பிற குப்பைகள் தொல்லியல் மற்றும் வேதியலில் எனக்கு இருந்த காதல் இன்னும் பலவற்றை நினைவு கூர்ந்து எங்கள் சுயமரியாதைக்காகவும் உன் எதிர்காலதிர்க்காகவும் உன்னை மருத்துவம் அல்லது பொறியியல் படிக்கச் சொன்னோம் வற்புறுத்தாத நிலையிலும் நீ இஷ்டமே இல்லாமல் எங்களுக்காக பொறியியல் படித்தாய் உன்னை உன் போக்குலயே விட்டிருந்தால் இன்னும் நல்லா வந்திருப்பியோ??? என்று கண்களின் ஓரம் வழிந்த நீர்த்துளியை துடைத்து "இது தானாமா உன் டக்கு ???"னு மட்டும் கேட்ராதலனு சொல்லி ஏதோ வெறுமையை போக்கி அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றார்...இன்றும் அந்த டக்கு மனசுக்குள் பாரமாய் இருப்பதாக உணர்கிறேன் .....

Wednesday, 15 August 2012

சம்பாசனை

மூன்று விதமான சம்பாசனைகளை  நேற்று எதிர் கொண்டேன்
முதல் நண்பன் எல்லா சூப் பையன் தன் காதலி தன் காதலை ஏற்கவில்லை என்று புலம்பினான் அவனை சமாதான படுத்தி fb மூடும் பொழுது ஒரு நண்பி  இரவு  11 மணிக்கு போன் செஞ்சு என் lover என்ன ஏமாத்திட்டு போய்ட்டான் இப்போ இன்னொருத்தி கூட சுத்தறான் கேட்டா நீ அழகா இல்லை எனக்கு நீ வேண்டாம்னு சொல்லிட்டான் எனக்கு செத்திடலாம் போல இருக்குனு ஒரே அழுகை அவளையும் ஒரு வழியா சமாதான படுத்தி உறங்க போன அம்மா  " யாருல அது போன்ல ??? பொட்டபில்லை சகவாசம் அதிகமா வச்சிகிட்ட வாழ்கை வெளங்காது ஒழுங்கா வேலைக்கு போய் உருபுட்ற வழிய பாருன்னு" சொல்றாங்க...இரவு முழுக்க நண்பி கூறிய வார்த்தைகள் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன.....

Tuesday, 3 July 2012

ஏதோ ஒன்று

ஞாயிரறன்று நான் நெல்லையப்பர் கோவில் தேரிற்காக நெல்லை சென்றேன்..நெல்லை டவுன் தான் அம்மாவின் சொந்த ஊர்...எட்டு  வருடங்களுக்கு பிறகு சென்றேன்...நான்கு ரத வீதிகளிலும் சுற்றிதிரிந்தேன் சிறுவயதில் நான் ரசித்த இடங்கள் இன்றும் மாறாமல் இருப்பவை நிறைய...
இந்த 4 வருட சென்னை வாழ்க்கையில் நான் கண்டவை இங்கு எதிர்பதமாக இருக்கின்றன...
"சென்னையில் நீங்கள் தண்ணீர் அருந்த பாட்டில் வாங்க வேண்டும் அது குளிர்பான கடையாக  இருந்தாலும் சரி  ஆனால் இங்கு பல கடைகளில் மண் பானை உள்ளது...
சென்னையில் நீங்கள் எப்பொழுதும் ஓடிகொண்டிருக்கும் மனிதர்களை காணலாம் இங்கும் உண்டு ஆனால் கொஞ்சம் மாறுபடும்..
இங்கு ஒவ்வொரு பொருளிற்கும் தனி பிரசித்திபெற்ற கடைகள் உண்டு
              "அல்வா -இருட்டு கடை"
              "தோசை -ரெகு விலாஸ்"
என்று இருக்கும் ஒவ்வொரு கடைக்கும் நடந்து சென்று ருசித்த ஞாபகங்கள் நிழலாடின...
பல வருடங்கள் கழித்து ஜவ்வு மிட்டாய் கண்டேன் சாப்பிட ஆசை இருந்தும் சாப்பிட வில்லை...
கோவிலின் ஒவ்வொரு சந்நிதிக்கும் அம்மா சொல்லும் கதைகள் அன்றும் தொடர்ந்தது ..
கடைசியாக சென்ற பொழுது தேர் தடியில் ஏறி ஆடிய தருணங்கள்...தேரோடத்தின் போது அங்கு தரும் பானகரம் இன்றும் நாவில் இனிக்கின்றன..
டிவிஎஸ் 50யில் செல்பவர் கூட ஹெல்மெட் அணிந்து சென்றது ஆச்சர்யமாக இருந்தது...
எல்லாவற்றிற்கும்  முத்தாய்ப்பாய் எனக்கு பிடிக்காத மற்ற ஆண்களுக்கு பிடித்த ஒன்று
இங்கு பெண்டுகள் சேலை / தாவணியில்  சுற்றி  திரிகிறார்கள்...
இன்றுவரை எனக்கு பிடிக்காத / புரியாத ஒன்று இவர்கள் குனிந்த தலை நிமிராமல் நேராக யார் மீதும் இடிக்காமல் நடப்பது...எனக்கு இதில் சென்னை பெண்களைத்தான் பிடிக்கும் நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை இவர்களின் தலைகுனிந்த நடை நம்மை குற்றவாளி போல் காட்டுகிறது..."நீ பார்க்குற நானும் பார்க்குறேன் " இது சென்னை பெண்களின் மிகபெரிய plus point...
மீதி மற்ற போஸ்டில் தொடரும்.