Sunday, 19 August 2012

முத்தம் பிடிக்காது

ஒரு சில காரணங்களால் சில சம்பவங்கள் நம் மனதை விட்டு விலகாது...

                   ஹாக்கி விளையாட்டில் கை ஒடிந்து அவளை பார்க்க சென்ற பொழுது அவள் மனம் பட்ட அவஸ்தை இன்றும் நிழலாடுகிறது...அப்பொழுது தான் நாங்கள் இருவரும் தனிமையில் கழித்த இரவு ஒரு தாயாக என்னை கவனித்தாள்..
       இரவில் பெரும்பாலும் உடை அணிவதில்லை அன்றும் அவளே எந்த வித சலனமும் இல்லாமல் என்னருகில் அமர்ந்து தாலாட்டு பாடி உறங்க வைத்தாள்..
        காலை எழுந்த பொழுது என்னருகில் சிறு பிள்ளையைப்போல் உறங்கிக்கொண்டிருந்தாள்..காதலும் காமமும் வேறென புரிய வைத்தவள் அவள்..மிகச்சிறிய விவாதத்தை புதாகரமாக எடுத்துச்சென்று கடைசியில் ஒன்றுமில்லை என முத்தம் கொடுத்து முடிப்பவள்..
     பாதி நாட்கள் அவளது முத்தம் அவள் கண்ணத்தை வீங்க வைத்திருக்கிறது அப்பொழுதெல்லாம் எனக்கு முத்தம் பிடிக்காது சற்று விசித்திரமானவன் நான்....என்னை மனிதனாக்கி உணவு உட்கொள்ளும் முறைகளிலிருந்து உள்ளாடை வாங்குவது வரை கற்றுதந்தவள் அவள்.....
   எல்லா காதலர்களைப்போல நாங்களும் இரவில் நெறுக்கமாக பேசுபவர்கள் தான்..அவள் எனக்கு பல விசயங்களை கற்றுதந்தவள்...இருவரும் ஒன்றாக சங்கமிக்க பல வாய்ப்புகள் இருந்தும் அவளே வெளிப்படையாக கேட்டும் உள்ளுக்குள் ஆசை இருந்தும் நான் நிராகரித்தேன் இன்றுவரை அது ஏன் என்று தெரியவில்லை!!
     பல பெண்களை கடந்து வந்தாலும் அவள் மட்டும் சற்று விசித்திரமாக தெரிகிறாள் இன்றும் தாயாக,காதலியாக,தோழியாக,விரோதியாக,செவிலியாக பல பரிமானங்களைக்கொண்டு பெயரிர்க்கேற்றார் போல் மோகனமானவள்...

No comments: