இரண்டு வாரங்களுக்கு முன்பு தொல்லியல் மற்றும் மொழியியல் தொடர்பாக துழாவிக்கொண்டிருந்த பொழுது அம்மா என் அருகில் அமர்ந்து பேச்சு கொடுத்தார்கள்...வேலைக்கு செல்லாமல் வெட்டியாக இருப்பதாக அழுத்துக்கொண்டர்...பேச்சு செல்ல செல்ல என் பள்ளி காலங்களில் வீட்டிற்கு தெரியாமல் மொட்டை மாடி ஓட்டுப்பிறையில் நான் 6,7,8 ஆம் வகுப்புகளில் யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த ஆய்வகம் அதில் நான் தயார் செய்திருந்த அமிலங்கள் இன்ன பிற குப்பைகள் தொல்லியல் மற்றும் வேதியலில் எனக்கு இருந்த காதல் இன்னும் பலவற்றை நினைவு கூர்ந்து எங்கள் சுயமரியாதைக்காகவும் உன் எதிர்காலதிர்க்காகவும் உன்னை மருத்துவம் அல்லது பொறியியல் படிக்கச் சொன்னோம் வற்புறுத்தாத நிலையிலும் நீ இஷ்டமே இல்லாமல் எங்களுக்காக பொறியியல் படித்தாய் உன்னை உன் போக்குலயே விட்டிருந்தால் இன்னும் நல்லா வந்திருப்பியோ??? என்று கண்களின் ஓரம் வழிந்த நீர்த்துளியை துடைத்து "இது தானாமா உன் டக்கு ???"னு மட்டும் கேட்ராதலனு சொல்லி ஏதோ வெறுமையை போக்கி அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றார்...இன்றும் அந்த டக்கு மனசுக்குள் பாரமாய் இருப்பதாக உணர்கிறேன் .....
No comments:
Post a Comment