திடீரென முடிவெடுத்து அதை செயல்படுத்த பகீரத பிரயத்தனம் செய்வது என் மிக கொடூரமான பழக்கங்களில் ஒன்று...
அவ்வாறே அலுவலகத்தில் கிடைத்த மும்பை (EXPOSURE TRIP) பயண வாய்ப்பை உதறிவிட்டு பெங்களூரு கிளம்பிச்சென்றேன் கடைசி வரை நான் மும்பை வருவேன் என எதிர்பார்த்த நண்பர்களுக்கு ஏமாற்றத்தை பரிசலித்து '' நம்ம பெங்களூரு'' புறப்பட்டேன்.. எனது முடிவெடுக்கும் திறனை பார்த்து அரண்டு போன மதுவிற்கு அனுதாபங்கள்.....
பெங்களூருவிற்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் தான்...என் வாழ்வை மாற்றிய பல சம்பவங்கள் பெங்களூருவை மையமாக வைத்தே நகர்ந்தன...
அப்படிப்பட்ட பெங்களூருவை காண பல தடைகளை கடந்து 2 வருடம் கழித்து கிடைத்த வாய்ப்பை பற்றிக்கொண்டு புறப்பாடு தொடங்கிற்று...
A/C Volvo பேருந்து நான் நினைத்தது போல் ஜன்னலோரம் ஓட்டுனர் இருக்கைக்கு அருகில்....வழக்கமான அலைபேசி கொஞ்சல் சண்டை முத்தம் என இரவு 12 மணிவரை தொடர்ந்தது...அவள் உறங்க நான் நடத்துனருடன் சிறிது கன்னடத்தில் கதைக்க...இல்லை இல்லை சிதைக்க....அவர் தமிழை காவுவாங்க....நான் தமிழை காப்பாற்ற தெலுங்கிற்கு தாவ இரவு 2மணிக்கு தூங்கினேன்...நடுவில் (Dark Fantasy,veg snaker) கொறித்து காலை 4 மணிக்கு (Majestic Bus Stand) வந்திறங்கினேன்....
ஒரு சாயாவும் குர்குரேவும் உள்ளே போக ஒவ்வொரு ஓட்டுனர் நடத்துனரிடமும் இடம் சொல்லி தடம் எண் கேட்டுவந்தேன்...(முதலிலேயே முழு வழியும் தெரியும்) வழி தெரிந்தும் தெரியாது போல் கேட்பது விசித்திரமான அனுபவம் வேறு எதிலும் கிடைப்பதில்லை
எனது முக அமைப்பும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாநிலத்தவன் போல் தெரியும்.என் அலுவலகத்தில் பலரும் நான் பெங்காளி என்று நம்பியுள்ளனர்.நான் தமிழில் எழுத நண்பர் கேட்டேவிட்டார்...
அந்த கலோபரத்தில் 1 மணி நேரம் போனது பின் மாமாவிற்கு தகவல் கூறி
அவர் வீடு சேர 6 மணி ஆனது...பெங்களூரு எனக்கு பார்த்தவுடன் பிடிக்க இரண்டு காரணம் கேரளா மாதிரி இட அமைப்பு மற்றும் சீதோசனம்...
எப்போதும் போல் அனைவரும் வந்து சேர காரில் கன்னட குத்து பாடல்கள் ஒலிக்க,ஊர் சுற்றி வித விதமாக படம் பிடித்து,மாலை ஊர் சுற்ற நினைத்து முடியாமல் போக,நான் மந்திராலயம் செல்லும் திட்டத்தை கடைசி நிமிடத்தில் மாற்றி நேற்றிரவு 10 மணிவாக்கில் சென்னை செல்ல ஆயத்தமானேன்...
பட்டர் நாணும்,மஷ்ரூம் டிக்காவும் சினாக்கரும் வாங்கி பேருந்தில் ஏற நடத்துனர் ''மீரே ஸ்பெசல் பாசஞ்சர் நேடு எஞ்சாய் செய்யண்டி'' என்றார்....ஆம் நான் மட்டும் பிரயாணிக்க "Volvo A.C"ல் அமர்ந்து நடத்துனருடன் கதைக்க பல கதைகள் கிட்டின படமாக்கும் அளவிற்கு...
பின் மைசூரில் ஒரு வடக்கிந்திய ஜோடி ஏறிற்று நான் முதலிலேயே ஓட்டுனரிடம் 20 டிகிரியில் வைக்க சொல்லி எனக்கு கடைசி சீட்டில் படுக்கை விரித்து {நான்கு பிளாங்கெட் விரிப்பு எட்டு பிளாங்கெட் தலையனை} படுக்க சென்றேன்...எனக்கு முந்தைய சீட்டில் நடத்துனரும்...
அதற்கு நேரெதிராக அந்த ஜோடியும் அமரந்தனர் வண்டியின் சீதோசன நிலையோ அல்லது அவர்களது ஆர்வமோ அவர்களின் ஊடல் தொடங்கிற்று நாங்கள் இருப்பது பற்றி கவலையில்லாமல்....
நான் நாகரீகம் கருதி மெல்லிசை பாடல்கள் வைத்து திரும்பி படுத்து உறங்கினேன் காலை 5 மணி சென்னை வந்து அக்கா வீட்டிற்கு கிளம்பி பேருந்தில் ஒருவன் கையிலிருந்த பிலிம் பேர் புத்தகத்தை படிக்க வாங்கி தாம்பரத்தில் தராமல் செல்ல இது பெங்களூரு அல்ல சென்னை என்பது நினைவிற்கு வர வீடுவந்து சேர்ந்தேன்....
Monday, 14 January 2013
Sunday, 13 January 2013
இடை
கனவொன்றை விவரித்தேன்...
கனவொன்றை சிலாகித்தேன்...
கனவைவிட என் கவி நயம்
என்றுரைத்தாய்....
அதன் சொல்லாடல்
சிறப்பென்றாய்...
உனக்கோ என் கவி பிடிக்க...
எனக்கு அக்கனவில் உன்
இடைபிடித்த நியாபகம்...
இன்றும் பூக்கிறேன் சிறு
புன்னகையாய் என்னிதழ்களில்
உன் இடைபிடித்து தோள் சாய்ந்து
கதைத்த பொழுதுகளை.... <3 <3
கனவொன்றை சிலாகித்தேன்...
கனவைவிட என் கவி நயம்
என்றுரைத்தாய்....
அதன் சொல்லாடல்
சிறப்பென்றாய்...
உனக்கோ என் கவி பிடிக்க...
எனக்கு அக்கனவில் உன்
இடைபிடித்த நியாபகம்...
இன்றும் பூக்கிறேன் சிறு
புன்னகையாய் என்னிதழ்களில்
உன் இடைபிடித்து தோள் சாய்ந்து
கதைத்த பொழுதுகளை.... <3 <3
கவி
உனக்கு என் கவியும்
எனக்கு உன் கனவும்
பிடித்திருக்க
நிதமும் கனவாய் நீ வர
தீண்டா கவி பல
நானுரைக்க
பொழுதும் போகிறது உன்
சிறு குறுஞ்செய்தி
சிரிப்பால்.....
என்னுள் ஏக்கம் நிதானமாய்
எட்டிப்பார்க்க உன் கண் பார்க்க
ஆசை
காத்திருப்பேன் பல
கனாக்களுடன் கண்
இமைக்காமல்......<3
எனக்கு உன் கனவும்
பிடித்திருக்க
நிதமும் கனவாய் நீ வர
தீண்டா கவி பல
நானுரைக்க
பொழுதும் போகிறது உன்
சிறு குறுஞ்செய்தி
சிரிப்பால்.....
என்னுள் ஏக்கம் நிதானமாய்
எட்டிப்பார்க்க உன் கண் பார்க்க
ஆசை
காத்திருப்பேன் பல
கனாக்களுடன் கண்
இமைக்காமல்......<3
Subscribe to:
Posts (Atom)