சற்றும் பால்மனம் மாறாத குணம்
வயதை மீறிய தோற்றம்
மெதுவாய் வளரும் அவயம்
கையில் பையுடன் கடைக்குச்செல்ல
வயதை மீறிய ஆபாசத்துடன்
வயதில் புரியா குழந்தையை
நோக்கும் மாந்தர் நடுவே
கையாட்டி செல்கின்றாள்
காய்கறி வாங்கிவிட்டு
கையில் மிச்சமும்
சாக்லேட்டும் வைத்துக்கொண்டு
வீதியில் நடக்கையிலே
விசித்திர வலி அடிவயிற்றினுள்
வாட்டி வதைக்க பெண்ணியத்தின்
பெருஞ்சிறப்பாய் பொறுமையினை
இடற்பேன நடை ஓட்டமாக
புறாக்கூண்டின் பெரிய வகையாம்
அப்பார்ட்மெண்டெனும் கூடுகளில்
படியேறி..வீட்டின் அழைப்பு மணி
அடிக்கும் பொழுதும் விழாமல் இருக்கின்றன
அவள் வாங்கிய சாக்லேட்டுகள்
வலி அதிகரிக்க அம்மா என்று அலறி
பொத்தென சோபாவில் விழ
அடுக்குளையிலிருந்து வெளிப்பட்டாள்
பார்த்தவுடன் புரிந்துவிட்டது
பக்கத்துவீட்டு பரிமளா மாமியும்
வர வீட்டின் மூலையில்
அமர்த்தப்பட்டாள் வலிநிவாரணியுடன்
அடுத்தடுத்து பல கட்டளைகள்,
பல கொஞ்சல்கள்,அறிவுரைகளென
எதுவும் புரியாமல் நிக்கத்தவளாய்
கையில் சாக்லேட்டுடன்
டெடியுடன் விளையாடுகின்றாள்
அழைப்புமணி அடிக்க அப்பாவும் வர
எழக்கூட மணமில்லாமல் வலியில்
துடித்தவளிடம்
தம்பி சென்று கேட்டான் ''என்ன
ஆயிற்று??'' அருகில் சென்றவனை
அவள் பெறியமனுஷி ஆயிட்டாள்
பக்கம் போகாதே என
கத்திய அம்மாவை விசித்திரமாய்
பார்த்தனர் அக்காளும் தம்பியும்
கையில் சாக்லேட்டுடன்
இனி மாதம் தோறும்
அவளின் வாழ்வில் கடைசி மூன்று
நாட்கள் தான் வலியுடன் கூடிய
மனித நாகரீகத்தில்
Wednesday, 5 June 2013
மழைக்குஞ்சு
இருக்கமான பட்டாடையுடன்
மறுதலித்து மாமன் மடியில்
விளையாடிய பிஞ்சிற்கு
காதணி விழாவாம்
கொங்கை மனம் மகிழ-அவனை
எடுத்து வினவ..விசித்திரமாய்
கேட்கின்றான் கதை
ஒன்றை
வாயில் வாழைப்பழம் தினிக்க
வலியுடன் வாட
மாமனும் அப்பனும்
மாறி மாறி பிடிக்கின்றனர்
வெளியிலே கடும் காற்று
மேகம் சூழ அனைவரும்
உண்டு தனிக்க குல
சாமிக்கு பொங்கல் படைத்து
இவனை மட்டும் விட்டு விட்டனர்
இளம் கொங்கையிடம்
கான மயிலாய் அவள்
இடையில் நடனமாட
விளையாடு என விரித்த
பாயில் விட்டுவிட்டாள்
கரும் மேகம் போர்வையாய்
சுற்றிவர பாயின் விளிம்பில்
ஊரும் எறும்பை பிடிக்க
தவழ்ந்து நடக்க மழைக்குஞ்சினை
இவனது காதில்
தடவியது கரிய மேகம்
தொங்கு மாடம்
தொங்கு மாடத்தில் தோட்டம் போட்டேன்
காற்றை அளந்து விலையில் விற்றேன்
கவிதையும் காதலும் கருமம் பிடித்தவை
கழுதையைக்கூட கடவுளாக்கும்
இன்னும் கோபம் தீரவில்லை
இன் சொல் சொல்லவில்லை
குட்டிச்சுவற்றில் ஏறி அமர
குபேர பட்டினத்திலிருந்து
குதிரை வாங்கும்
வலியோடு எடுத்த போனில்
வல்லென விழுந்தேன்
பெண்ணாய் பிறக்க
எத்துனை சாபம் உனக்கு??
மீண்டும் குறுஞ்செய்தி
மாடத்திலிருந்து வானத்தில்
பறக்க அதே ஏக்கம்-உன்
எழுதாத எழுத்துக்களிலும்
நீ என்ன பாவம் செய்தாய்
இளமையில் காதலைத்தவிற
இன்னும் கோபமுண்டு
இடுகாட்டில் வாழ விருப்பமில்லை
கசங்காத கவசமும்
கலவித்திரிய ஆசையோ?
காதலில் மாத்திரம் மிகை உண்டு
கண்டு சினுங்க கவி உண்டு
வேறெதுவும் தெரியாமல்
புலம்பித்தவிக்கிறேன்
என் எழுத்தும் காதலும்
கல்லறையேற்றாமல்
கனிவாய் வாழ இக்கூட்டுப்புழுவின்
குகைக்குள்ளே குப்புறக்கிடக்கும்
சிம்மமாய் காதல் மட்டும்
குடைகிறது மனதை ♥♥♥♥♥♥♥♥
காற்றை அளந்து விலையில் விற்றேன்
கவிதையும் காதலும் கருமம் பிடித்தவை
கழுதையைக்கூட கடவுளாக்கும்
இன்னும் கோபம் தீரவில்லை
இன் சொல் சொல்லவில்லை
குட்டிச்சுவற்றில் ஏறி அமர
குபேர பட்டினத்திலிருந்து
குதிரை வாங்கும்
வலியோடு எடுத்த போனில்
வல்லென விழுந்தேன்
பெண்ணாய் பிறக்க
எத்துனை சாபம் உனக்கு??
மீண்டும் குறுஞ்செய்தி
மாடத்திலிருந்து வானத்தில்
பறக்க அதே ஏக்கம்-உன்
எழுதாத எழுத்துக்களிலும்
நீ என்ன பாவம் செய்தாய்
இளமையில் காதலைத்தவிற
இன்னும் கோபமுண்டு
இடுகாட்டில் வாழ விருப்பமில்லை
கசங்காத கவசமும்
கலவித்திரிய ஆசையோ?
காதலில் மாத்திரம் மிகை உண்டு
கண்டு சினுங்க கவி உண்டு
வேறெதுவும் தெரியாமல்
புலம்பித்தவிக்கிறேன்
என் எழுத்தும் காதலும்
கல்லறையேற்றாமல்
கனிவாய் வாழ இக்கூட்டுப்புழுவின்
குகைக்குள்ளே குப்புறக்கிடக்கும்
சிம்மமாய் காதல் மட்டும்
குடைகிறது மனதை ♥♥♥♥♥♥♥♥
ஒரு முத்தம் கேட்டால் ஓராயிரம்
தந்து போதுமா?? என்பாய்...!
போதவில்லை என்று சொல்லும் முன்
முழுவதுமாய் முத்தமிடுவாய்
முதிலில் துவங்கிய
இடத்திலிருந்து....
இன்று ஏனோ சிறு கோபம்
ஆசையாய் கேட்ட முத்ததிற்கு
அடிவயிற்றிலிருந்து அலற
சிறு பிள்ளையாய் துவண்ட என்
முகம் காட்ட விருப்பமில்லை
முத்தமிடும் இதழ்களில்
வலிக்கும் என்பதற்காக....<\3
தந்து போதுமா?? என்பாய்...!
போதவில்லை என்று சொல்லும் முன்
முழுவதுமாய் முத்தமிடுவாய்
முதிலில் துவங்கிய
இடத்திலிருந்து....
இன்று ஏனோ சிறு கோபம்
ஆசையாய் கேட்ட முத்ததிற்கு
அடிவயிற்றிலிருந்து அலற
சிறு பிள்ளையாய் துவண்ட என்
முகம் காட்ட விருப்பமில்லை
முத்தமிடும் இதழ்களில்
வலிக்கும் என்பதற்காக....<\3
நடுவுல கொஞ்சும் கவிதையை காணும்
வெறும் சாரலின் மணற்தூவளாய்
வெறுப்பு சாரலின் மனத்தூரலில்
சுழன்றடிக்கும் சூறாவளியின்
பிண்டமாய் காதல்
குஞ்சொன்று கண்டேன்...
அதன் சிறகினை உடைத்து
இதயக்கூட்டிலடைத்து
வளர்ந்திடச்செய்தேன்...
கீச்சிடும் குரலில்
கவிதைகள் வளர
காற்றினில் தூவிய விதியாய்
பூட்டும் இல்லை
சாவியும் இல்லை
பறக்க ஆசையுமில்லை
கீச்சிடும் கரிசல் மனமும்
ஒற்றைப்பிளம்பாய் உன்
விழி மௌனமும்
ஒய்யாரக்கருவினில்
அக்காதல் குஞ்சின்
பிண்டமும்....
பறக்கத்துடிக்கும்
பறவையாய்
இதயத்தை நகங்கீற
மீண்டும் பிறக்குதடி
பறக்கத்துடிக்குதடி
சூறாவளிப்பிண்டம்...........
Subscribe to:
Posts (Atom)