தொங்கு மாடத்தில் தோட்டம் போட்டேன்
காற்றை அளந்து விலையில் விற்றேன்
கவிதையும் காதலும் கருமம் பிடித்தவை
கழுதையைக்கூட கடவுளாக்கும்
இன்னும் கோபம் தீரவில்லை
இன் சொல் சொல்லவில்லை
குட்டிச்சுவற்றில் ஏறி அமர
குபேர பட்டினத்திலிருந்து
குதிரை வாங்கும்
வலியோடு எடுத்த போனில்
வல்லென விழுந்தேன்
பெண்ணாய் பிறக்க
எத்துனை சாபம் உனக்கு??
மீண்டும் குறுஞ்செய்தி
மாடத்திலிருந்து வானத்தில்
பறக்க அதே ஏக்கம்-உன்
எழுதாத எழுத்துக்களிலும்
நீ என்ன பாவம் செய்தாய்
இளமையில் காதலைத்தவிற
இன்னும் கோபமுண்டு
இடுகாட்டில் வாழ விருப்பமில்லை
கசங்காத கவசமும்
கலவித்திரிய ஆசையோ?
காதலில் மாத்திரம் மிகை உண்டு
கண்டு சினுங்க கவி உண்டு
வேறெதுவும் தெரியாமல்
புலம்பித்தவிக்கிறேன்
என் எழுத்தும் காதலும்
கல்லறையேற்றாமல்
கனிவாய் வாழ இக்கூட்டுப்புழுவின்
குகைக்குள்ளே குப்புறக்கிடக்கும்
சிம்மமாய் காதல் மட்டும்
குடைகிறது மனதை ♥♥♥♥♥♥♥♥
No comments:
Post a Comment