Wednesday, 5 June 2013

நடுவுல கொஞ்சும் கவிதையை காணும்



வெறும் சாரலின் மணற்தூவளாய்
வெறுப்பு சாரலின் மனத்தூரலில்

சுழன்றடிக்கும் சூறாவளியின்
பிண்டமாய் காதல்
குஞ்சொன்று கண்டேன்...

அதன் சிறகினை உடைத்து
இதயக்கூட்டிலடைத்து
வளர்ந்திடச்செய்தேன்...

கீச்சிடும் குரலில்
கவிதைகள் வளர
காற்றினில் தூவிய விதியாய்

பூட்டும் இல்லை
சாவியும் இல்லை
பறக்க ஆசையுமில்லை

கீச்சிடும் கரிசல் மனமும்
ஒற்றைப்பிளம்பாய் உன்
விழி மௌனமும்

ஒய்யாரக்கருவினில்
அக்காதல் குஞ்சின்
பிண்டமும்....

பறக்கத்துடிக்கும்
பறவையாய்
இதயத்தை நகங்கீற

மீண்டும் பிறக்குதடி
பறக்கத்துடிக்குதடி
சூறாவளிப்பிண்டம்...........

No comments: