Monday, 6 May 2013

முரண் வசவு

படம் பார்க்க சென்ற
படபடப்பு அடங்குவதற்குள்
படகிலே பயணம்
பயண கலைப்பில்
பசியென பர்சை எடுக்க
பாதி கிழிந்த 5 ரூபாய் நாணயம்
பரவாயில்லை என பாஸ்தாவும்
பர்கறும் கடித்துவிட்டு
பாழாய் போன
ப்லாஸ்மா டீவியில்
பவர் ஸ்டார் படம் பார்த்து
பாதி உறக்கம் தொலைத்து
பரிதவித்த
பகுத்தறிவாளனுக்கு
பாசாங்கு செய்யத்தெரியவில்லை
பாதி உடைந்த
பால் பல்லை
பத்திரமாய்
பரணியில் வைத்து
பாவமாய் பார்த்தால்
பச்சிளம் குழந்தையுடன்
பிச்சைக்காரி....
பின் குறிப்பு ஏதுமில்லாமல்
புறவாசல் வழியே
புஷ்பக விமானத்தில் அல்லக்கை
புடைசூழ புன்னை இளவரசி
பூப்பெய்தி நின்றாள்
புசிக்கின்ற காமுகன் முன்

No comments: