Friday, 3 May 2013

பேருந்து தொடங்கியதும் காயத்ரி அக்காவிற்கு
குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு...சன்னலோரம் தலைசாய்த்தேன்
தமிழக அரசு குளிர் சாதன பேருந்து....எப்பொழுதும் போல் இயந்திரமான
சென்னையின் வாசல் வழியே நகர மனம் ஒரு வாராமாக நடந்த விடயங்களை அசைபோடுகின்றது....
பெருங்களத்தூர் வந்ததும் மனம் சிறு பிள்ளையைப்போல் ஆர்பரிக்க
பழைய கல்லூரி நினைவுகள் வந்து செல்கின்றன....
இன்னும் மனதில் அசரீரியாய் அவள் வார்த்தைகள் '' எப்போடா என்ன பஸ்ல கூட்டிட்டுப்போவ??? ஆசையா இருக்கு உன்கூட லாங் டிராவல் பஸ்ல போக...''
பேருந்தில் போகிறவனுக்கு காரின் மீது ஆசை..காரில் செல்பவருக்கு மன நிம்மதி இப்பேருந்திலா?? என்ற குழப்பத்தில் அன்னிச்சையாக சிரித்து அவள் புகைப்படம் அலைபேசியில் எடுத்து அந்த கண்ணங்களை கிள்ளி 'ஜு...ஜு...ஜு...' என்ற பொழுது நடத்துனர் அருகில் வந்தார் எங்க ஸார் போகனுமென்று...
எல்லாம் முடிந்து பேருந்து செங்கல்பட்டை கடக்க கல்லூரியின் வாயில் தேடி மீண்டும் சன்னலருகே முகம் சாய்கிறேன்...A/C வழி நீர் சன்னலில் என் கண்ணீருடன் நேர்கோடாக...

No comments: