Thursday, 2 May 2013

மழைத்துளி

உச்சி வெய்யில் வேளையில்
பிச்சி எக்கிப் போக
கண் உறக்கம் தொலைத்து
கடமையே என வேலைக்கு
வந்தேன்

வரும் நொடி தெரியாது
வந்தவுடன் புரியாது
வருவதற்காக ஏங்கும் மனம்
வந்திறங்கியவுடன் வகையறையில்லாமல்
கண்டேன்

காதலில் விழுந்தவனுக்கு
கண்ணீர்த்துளி மட்டும் மிச்சம்
அழுது அழுது வரண்டது கண்கள்
அளவில்லாமல் வாட்டியது துன்பம்
ஆண்டவன் இருக்கின்றான் - என்
அழுகை நிற்பதற்கு வானவில்
வரச்செய்தான்

எனக்காக அழுதன மேகங்கள் கொஞ்சம்
உனக்காக துடிக்கிறது மானங்கெட்ட நெஞ்சம்
கடைசியில் என் அழுகை கரைந்து போக
மழைத்துளியிலும் கடைசித்துளி
கசப்பாய் கண்ணீர்த்துளி.......
 

No comments: