Saturday, 4 May 2013

மொட்டை

பல முறை யோசித்து சென்ற மாதம் மொட்டை போட உத்தேசித்து சலூன் கடைக்கு போனேன் இந்த பாளாய் போன பொடுகுத்தொல்லையால் மொட்டை போடுங்க அண்ணாச்சினு சொல்லிட்டு உட்கார்ந்தேன் எனக்கு முன்னதாக ஒரு சேட்டுக்குடும்பம் முடிவெட்ட அச்சிறார்கள் ஆளுக்கொரு ஸ்டைல் சொல்லிக்கொண்டிருக்க (எனக்கு அவர்கள் சொன்னதில் பாதி மட்டும் தான் பிடிபட்டது ) நமது சிகை அலங்காரர் அவர் ஸ்டைலில் கரம்பிக்கொண்டிருந்தார் பாவம் அவர்களை பார்பதற்கே பாவமாக இருந்தது...
நானும் இந்த படுபாதகமான கொடுமையை பல வருடங்களாக அனுபவித்து வந்துகொண்டிருக்கிறேன்....இந்த கொடுமை தாளாமல் 5 வகுப்பில் காந்தி போல நானே முடி திருத்திய கதை பள்ளி முழுவதும் பரவியது தனிச்சிறப்பு...இப்பொழுது கூட முகச்சவரன் செய்யத்தெரியாத ஒருவனிடம் போய் முகம் கொடுத்து ஆபீஸில் கலாய்பட்டது நடந்தது....

 பள்ளி முழுப்பரிச்சை லீவு அத்தை வீட்டுக்கு ஓடியாச்சு அங்குதான் நண்பர்கள் அதிகம்...அங்கு கிணத்தடியில் குற்றால மலையின் அழகை இரசித்துக்கொண்டே நீர் இரைத்து குளிப்பது தனி சுகம்...என் அத்தை பெண் என்னை விட 7வயது அதிகம் உள்ளவள் ஒரு நாள் உனக்கு ஜெமினி (விக்ரம்) பட ஸ்டைலில் முடி வெட்டரேனு சொல்லி தலையில் கைவைத்தாள் கடைசியில் பிதாமகன் விக்ரமாக்கிட்டு மாமா வீட்டுக்கு ஓடிட்டா அத்தையோட சுப்ரபாதத்தை கேடக சகிக்காமல் அப்பாக்கு போன் போட்டு அனுமதி வாங்கிட்டு சலூனுக்கு போய் ஒருவழியா மொட்டைய போட்டுட்டு
வீட்டுக்கு வந்தா மாமா ஊர்ல இருந்து வந்து எங்கடா மொட்டை போட்டனு கேட்டார் அவருக்கு தெரிஞ்சா அவர் பொண்ணுங்களுக்கும் ( 8 வயசு அதிகம்) தெரிஞ்சு சீட்டு விளையாடும் போது அசிங்க படுத்திடுவாங்கனு ''அரசன் சலூனை அரசன் கோவில் மொட்டை''னு சொல்ல அத்தையும் நமட்டு சிரிப்புடன் உள்ளே செல்ல ஒரு மிகப்பெரிய வரலாற்றையே உருவாக்கி ஒரு கோவிலை பொதிகை மலையில் எழுப்பி அவரை  நம்ப வைத்த கதை மனதினுள் வர மெல்லிய சிரிப்புடன் சலூன் ரோலிங் சேரில் அமர்ந்து அவன் தலையில் தண்ணீர் தெளிக்க அதே கிணற்றின் குளிர் நீர் தலையில் பட்டதுபோல் ஆனந்தம்.....

No comments: