Sunday, 30 September 2012

''ஙே...ஙே..''

'' ஐ லவ் யூ ''

''ஐ லவ் யூ டூ''

'' என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?? ''

''இப்பவே பண்ணிக்கட்டுமா??''

''ஹம் சரி''

'' ரெண்டு வீட்டு சம்மதத்தோட பண்ணிக்குறேன்''

''சரி.....................ஹேய் கல்யாணத்துக்கப்புறம் இதே மாதிரி கவிதை

எழுதுவியா?? ''

'' ஓ...ஷூர்...''

'' உனக்கு எத்தனை குழந்தை வேணும்?? ''

'' முதல்ல ஒரு பொண்ணு அப்புறம் பையன்''இத்தோட

நிறுத்திருக்கலாம்...சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம்

ஆண்டிங்கிற மாதிரி...

''நம்ம பொண்ணு பிறந்ததுக்கப்புறம் அவளுக்கு மட்டும் அவளோட

ஒவ்வொரு  அசைவுக்கும் கவிதை எழுதுவேன்.....''

'' அவளுக்கு மட்டும் தானா?? அப்போ என்ன அம்பேல்னு

விட்டுடுவியா?? ''

''நா அப்படி சொல்லல...''

''என்ன அப்படி சொல்லல இப்படி சொல்லலனு சமாளிக்குற?? ஒழுங்கா

உனமைய சொல்லு??''

"ஙே ஙே"

'' என்ன முழிக்குற??''

''ஹேய் இல்லடா இப்போ நா வெளில போய்ட்டு ஆத்துக்கு வந்தா..நம்ம

பொண்ணுக்கு toys  வாங்கின்டு வந்தா அதுலயும் உனக்கு வாங்கின்டு

வரனுமா???'' சமாளிக்குறாராமாம்... ;)

'' சரி பொண்ணுக்கு மட்டும் தானா??? அப்போ எனக்கும் என்

பையனுக்கும் இல்லையா???

''ஙே..ஙே..''

'' என்ன முழிக்குற சொல்லு??''

''ஹேய் அது எப்படி வாங்கின்டு வராம இருப்பேனா??? அசடு..''

''அது என்னடா எப்ப பார்த்தாலும் பொண்ணு பொண்ணுனு தலைல

தூக்கி வச்சின்டு ஆடற?? அப்போ எதுக்கு பையன் வேணும் உனக்கு???

என்னைக்கா இருந்தாலும் அடுத்தவனாத்துக்கு போரவள ஏன்டா இந்த

கொஞ்சு கொஞ்சரே வேணும்னா வீட்டோட மாப்பிள்ள பார்த்து கட்டி

கொடுத்துடுவ போல??''

ரோசம் வந்திடுச்சு ''ஆமா அப்படி தான் கட்டிகொடுப்பேன்''

''உனக்கும்...உன் பொண்ணு மாப்பிளைக்கும் வடிச்சு கொட்டதான் நான்

இருக்கேன் பாரு?? போ..நான் என் பையன் கூட போறேன் போடா...''


''ஙே...ஙே..''

''எனக்கு மட்டும் தான் நீயும் உன் கவிதையும் உன் பொண்ணுக்கு கூட

கிடையாது...அவளுக்கு நீ எழுதறதா இருந்த எழுதி என்ட தான் தரனும்

எக்காரணம் கொண்டும் என்னுரிமையை விட்டுதர முடியாது''

'' சரி வா...இப்போ எதுக்கு இதை பத்தி பேசுற?? விடு அப்புறமா

பார்த்துக்கலாம்'' முன்னெற்றியில் முத்தமிட்டான்..

''டேய் கேடி உன்ன பத்தி தெரியும் டா எனக்கு..''

''என்ன தெரியும் ?? ''

''வெவ்வவ்வவ...சொல்லமாட்டேனே...''

'' டிரெயின் வந்திடுத்து...வா கிளம்பலாம்''

'' இரு உன்ட ஒன்னு கேட்கனும்''

'' என்ன??''

''உனக்கு நான் தானே எல்லாம்?? ''

'' அசடு...''

'' என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?? ''

'' உன்ன விட்ட என்னை எவ கட்டிப்பா சொல்லு??''

'' ஐய்யோடா....உன்ன தெரியும் டா கேடி ''

''ஙே...ஙே..''

Wednesday, 26 September 2012

குடும்பம்

வேலை காரணமாக இரு நாட்கள் வெளியூர் சென்று

ஊர் திரும்பும் வருண்  மனதில் 2 வயது மகனின் நினைவுகளே

நிரம்பி இருந்தது...

அப்பாவென அவன் மழலையில் அழைக்கும் சந்தமும்,

அவனை கட்டித்தழுவும் பொழுது அவனின் ஸ்பரிசதமும்,

இன்னும் பால் மனம் மாறாத அவனுடல் வாசமும்

அவனை சிலிர்ப்புறச்செய்த்தது.

இன்னும் வேகமாய் பயணித்தான் வீடு நோக்கி....

வீட்டின் கதவை ஆசையாய் தட்டினான் மணி இரவு 11...

உள்ளிருந்து அவன் மனைவி கண்களில் உறக்கம் சொக்க கதவை திறந்தாள்...

அவளிடம் வாங்கிய பைகள் திணித்துவிட்டு கண்களால் வீட்டை

சல்லடையிட்டான்..நேராக படுக்கை அறையினுள் நுழைந்து மகன் தூங்கும்

அழகை ரசித்தவாறே அவன் நெற்றியில் முத்தமிட்டான்...

அம்முத்தத்தின் உணர்வில் முழித்தெழுந்து அப்பாவென இருக்க

கட்டிக்கொண்டான்...அன்றிரவு முழுவதும் குழந்தையாய் மாறி மகனுடன்

தானும் உறங்கிப்போனான்...அவன் தோளில் அவன் மனைவி முகம்

பதித்து உறங்கினாள்....

தொடரும் தேடல்

இன்று திரைப்படம் பார்க்கலாம் என்று சற்று சீக்கிரமாக  

கிளம்பிவிட்டேன்...எப்பொழுதும் நேர் வழியில் அம்பை

செல்லும் பேருந்தில் ஏறாமல் ஊர் சுற்றிப்போகும்

பேருந்தில் ஏறினேன் நகரப்பேருந்தென்றாலும் கட்டணம் அதிகம்...

நடத்துனரிடம் ''அம்பை ஒன்னு'' என்று 10 ரூபாய் கொடுத்தேன்

என்னை விசித்திரமாக பார்த்து  '' சார்வாள் இது ஊர் சுத்திப்போகும்

அடுத்த பஸ் பின்னாடியே வரும் அதுல வரலாம்ல???''

நான் சிரித்துக்கொண்டே ''சரி பரவாயில்லை ஏறிட்டம்ல கொடுங்க

உங்களுக்கு பிடிக்கலனா இறங்கிடுதேன்'' கஷ்டப்பட்டு அக்ரஹாரத்தமிழை

மறைத்தேன்....

நடத்துனர் ''என்ன இப்புடி சொல்லிட்டீக நீங்க ஏதோ அவசர சோலியா

போரீங்கனு நினைச்சுதான் கேட்டேன்....இந்தாங்க டிக்கட்டு உள்ள ஏறி

உக்காருங்க''

ஏறி நேராக நடத்துனர் இருக்கையின் சன்னலோரம்  அமர்ந்தேன் எனக்கு

பிடித்த இடம்...

நெல்லை மாவட்டத்தை மழைக்காலங்களில் சுற்றுவதைவிட இவ்வாறு

சூரியன் வாட்டி எடுக்கும் காலங்களில் சுற்றுவது அழகானது....ஏனோ

தெரியவில்லை மக்களோடு பயணிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி

சொல்லிலடங்காது....இன்று சிறிதளவு பொருளாதர முன்னேற்றம்?! அடைந்த

பொழுதிலும் அவர்களிடம் ஊரிப்போன மரபும் கலாச்சாரமும் பிரம்மிக்க

வைக்கிறது...


எனக்கு முன் இருக்கயில்  இரு பள்ளி மாணவர்கள்

விளையாடிக்கொண்டிருந்தார்கள்..முக ஜாடை அண்ணன் தம்பியென

சுட்டியது....

அண்ணன் தம்பியிடம் ''ஏலே வீடு பத்தியெரியுது வாடா திருடா''

தம்பி ''வரமாட்டேன் போடா''

''அம்மா கூப்பிடுவாங்க வாடா திருடா''

''வரமாட்டேன் போடா''

''ஐஸ்கிரீம் வாங்கிதறேன் வாடா திருடா''

''வரமாட்டேன் போடா''

''குர்குரே வாங்கி தாறேன் வாடா ''

''வரமாட்டேன் போடா''

''பரோட்டாவும் சால்னாவும் வாங்கித்தறேன் வாடா திருடா''

''வரமாட்டேன் போடா''

அதற்குள் அவர்கள் நிறுத்தம் வந்தது எழுந்து இறங்கியவாரே அண்ணன்

 ஒவ்வொன்றாய் வாங்கித்தருவதாக வரச்சொல்லிக்கொண்டிருப்பான்...

என் மனம் இவன் திருடா என்றழைக்காமல் தம்பி என்றழைத்திருந்தால்

 வந்திருப்பானோ என்று தோன்றியது அதைவிட இதே மாதிரியாக

ஆதிச்சநல்லூர் பழந்தமிழ் நாகரீக காலத்தில் எம்மாதிரியான

விளையாட்டுக்கள் இருந்திருக்குமென என்னவோட்டம் சரியான பதில்

கிடைத்தால் வரலாற்றுப் பதிவாக்க முடியுமா என்ற நப்பாசை மனதினுள்

எழுந்தது.....பழங்கால பதிவுகள் கிட்டாத பொழுது உண்டாகும் வலி

கொடியது...தேடல் இன்னும் தொடரும் என் கடைக்காலம் வரை அது

முடியாது போனாலும் சமகால வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு

எடுத்துச்செலவதில் உறுதியாய் உள்ளேன்...

தேடல் தொடரும் என் அந்திம பயணம் வரை...

Tuesday, 25 September 2012

என் முதல் படைப்பு....

 இது என் 6 வகுப்பில் கிறுக்கியது இன்று வரை அதே எழுத்து நடை தான்

உள்ளது....சுவாரசியத்திற்காக சிறு மாறுதலுடன்....

இதை வாசித்து '' inception...transformers "" போன்ற படத்தின்

பாதிப்பென்று சொல்ல முடியாது ஏனென்றால் அப்பொழுது எனக்கு

தெரிந்த ஆங்கில படங்கள் ""jurassic park,deep blue sea,""

மட்டுமே.........
--------------------------------------------------------------------

 
மனோவின் அம்மா அவனை வேகமாக எழுப்பினார்....

திடுக்கிட்டு எழுந்தவன்  என்ன மா என்னாச்சு??? என்றான்....

அம்மா ''உடனே நாம தாத்தா ஊருக்கு போகனும் இங்க இருக்க கூடாது''

என்றாள்.

எதுக்குமா போகனும் என்னாச்சு?? இன்னைக்கு இராத்திரி டீவில பாப்பாய்

ஷோ பாக்கனும்

''அதுலா அங்க போய் பார்த்துக்கோ...முதல்ல கிளம்பு''

அவர்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு கிளம்ப தயாராயினர்...

''அம்மா வெளியில என்ன மா சத்தம்???''

''காதை பொத்திக்கோ ஒன்னுமில்லை...பயப்பிடாத அம்மா இருக்கேன்''

''ஹம் சரி''

இருவரும் நடக்க தொடங்கினர்...

எங்கும் வெடி சத்தம் எல்லாமும் அழிந்துவிட்டது....எல்லா வாகனங்களும்

ராட்சத உருவமெடுத்து ஒவ்வொறுவராய் அழிக்கின்றது....

கையை பிடித்துக்கொண்டிருந்த அம்மாவை காணவில்லை....

இவன் விசித்திர உருவம் பெற்று அவ்வரக்கர்களிடம் சண்டை

போட்டுக்கொண்டிருக்கிறான்..

அனைத்தும் முடிந்தது இவன் மட்டும் உயிருடன் இருக்கிறான்...

சடாரென யாரோ அழைப்பது போல் உள்ளது அவன் அம்மா அவனிடம்...

மனோ சீக்கிரம் எழுந்திட்றா தாத்தா வீட்டுக்கு போகனும் என்று

அடுக்களையிலிருந்து

கத்திக்கொண்டிருந்தார்...

''எல்லாம் கனவா?? ச்ச....பயந்துட்டேன்''என்று கூறியவாரு அம்மாவை நோக்கி
நகர்ந்தான்

Saturday, 22 September 2012

தேடல்

சற்று விசித்திரமான தேடலுள்ளவன் நான்...

அவ்வகையில் முல்லை தமிழ் மனக்கும் நெல்லையில்

இன்று வரை அவர்களை அறியாமலே அவர்கள் சேர்த்துவைத்திருக்கும்

பழந்தமிழ் சொற்றொடர்களில் நான் கண்டு வியந்தவை சில....

1)கொண்டி - கதவின் தாழ்பாள்

பெயர் காரணம்- இங்கு அமைந்திருக்கும் கதவுகளின் அமைப்பை பொருத்து கூப்பிடும் வழக்காடுஞ்சொல்

2)வாரியள் - துடைப்பம்,விளக்குமாறு...

பெயர் காரணம்- வீட்டில் உள்ள குப்பைகளை வாரி அள்ள பயன்படுவதால் வாரி+அள்ளுதல் மறுவியது..

இன்று இடம்பெயர்ந்த இலங்கை தமிழர்களிடம் வழக்கிலுள்ளது..

3)கோட்டி -பைத்தியம்|லூசு

பெயர் காரணம்- கோணலான மூளை கொண்டவன்..

4)பைய - மெதுவாக

பெயர் காரணம் - திருஞானசம்பந்தரால் தருவிக்கப்பட்டது...இன்று நெல்லை மதுரை பகுதிகளிலுள்ளது..

5) ஏனம் - பாத்திரம்

பெயர் காரணம் - ஒரு பொருளை ஏந்திச்செல்ல பயன்படுவது...

6)சாரம் -லுங்கி| கையிலி

பெயர் காரணம் - சரியான காரணம் தெரியவில்லை விசாரித்தவரை வேடிக்கையாக ஒருவர் கூறியது

எதையும் சார்ந்திராமல் ப்ரீயா இருக்க உதவுவது...

7) கல்கோனா -மிட்டாய் வகை

பெயர் காரணம்- கல்லைப்போன்று கடினமாக இருக்கும்...

8)சோலி - வேலை

பெயர் காரணம் - தெரியவில்லை தேடிக்கொண்டிருக்கிறேன் ஆனால் மலையாளத்தில் 'ஜோலி'எனக்கூறுவார்கள்

9) குச்சி - பல்பம்

பெயர் காரணம்- ஒல்லியாக இருப்பதால் குச்சி என்றே நிலைத்தது...

இன்னும் பல வார்த்தைகள் நியாபகமில்லை...

கெட்டவார்த்தையில் கூட பழந்தமிழ் விளையாடும் சபை நாகரீகம் கருதி எழுதவில்லை

முத்தாய்ப்பாக நான் இருக்கும் கிராமத்தின் பெயர்

அடைச்சாணி - அடைத்த காணி (எல்லாப்பக்கங்களிலும் வயல்வெளி அடைத்திருக்கும்)

என்பது மருவி அடைச்சாணி என்றானது

மற்ற திராவிட|வட மொழிகளுக்கு நம் தமிழ் அளித்த வார்த்தைகள் மற்றை தேசத்தில் மருவி வழக்கிலுள்ள

தமிற்சொற்களைப் பற்றி இன்னும் விரிவாக எழுத ஆசையாக உள்ளது..

Friday, 21 September 2012

1.50



அம்மா தன் பத்து வயது மகனிடம் ''ஏலே கார் வந்திடுச்சு ஒழுங்கா 3வது

ஸ்டாப்புல இறங்கு  பஸ் ஸ்டான்ட் பக்கத்துல ஒரு புளியமரம் இறுக்கும்

அதான் அடையாளம்.....நேரா கிழக்கால நடந்தனா ஆச்சி வீடு தெரியும்

ஆச்சிட்ட இந்த ஏனத்த  ( தூக்குச்சட்டி) கொடுல இதுல அவுகளுக்கு

பிடிச்ச முறுக்கும் அதிரசமும் இருக்கு....உனக்கு வேணும்னா   இரண்டு

எடுத்து வாய்ல போட்டுக்க..இந்தா டிக்கட்டுக்கு 5 ரூபா மிச்சத்த

பத்திரமா வெச்சிக்க உங்கய்யா கருக்கல்ல வந்து கூட்டிட்டு போவாரு....

டிக்கட்டு 3.50 அப்போ மிச்சம் 1.50 அண்ணாச்சி கடையில கல்கோனாவும்,தேன்

மிட்டாயும் வாங்கலாம் அம்மா மிச்சத்தை கேட்க மாட்டா...என்று மனதினுள் குதூகளித்தான்


அம்மா அவனருகிள் தொடர்ந்தவளாக '' தாத்தா பாட்டிய படுத்தாத..அவுகட்ட அது வேணும் இது வேணும்னு தொந்திரவு கொடுக்காதல...

புரிஞ்சதால???? உங்கப்பன மாதிரியே முழிக்காத....பாத்து போய்டுவால சரியா???

மகன் அனைத்தையும் கேட்டவாறே ''யம்மா சும்மா உசுர வாங்காத உன் சோலிய பாரு

நடவைக்கு ஆட்கள் போராங்க போ...'' என்று எரிச்சலானான்

பேருந்து நிறுத்ததில் வந்து நின்றது....

அம்மா நடத்துனரிடம் ''யண்ணாச்சி இவுன எங்க ஊர்ல இறக்கி விட்டிடுதீயலா??

மறக்காம பாக்கி சில்லறையக் கொடுங்க...''

நடத்துனர் இவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ''ரைட் ரைட் என்று கூவினார்''

அச்சிறுவன் கையிலிருந்த 5 ரூபாய் நோட்டைக்கொடுத்தான்...

நடத்துனர் ''ஏலே இந்தா சீட்டை பிடி மிச்சம் 1.50 இறங்கும் போது தரேன் நீ அந்த காலியான

சீட்டுல உக்காரு...''

கூட்டமில்லாத மதிய வேலை ஆதலால் இவனுக்கு உட்கார இடமும் கிடைத்தது

ஜன்னலோரம் வேடிக்கைப்பார்த்தவாறு அவ்வப்பொழுது சீட்டின் இடுக்கு வழியாக

நடத்துனரை பார்த்துக்கொண்டிருந்தான்...

அவன் மனதில் மிச்சத்தை தராமல் போய்விட்டால் அப்புறம் அண்ணாச்சி கடையில

தேன்மிட்டாயும் கல்கோனாவும் எப்புடி வாங்குறது என்ற எண்ண அலைகள் அவனைச்

சிதரடித்தன....மனதில் அழுகை பெருக்கெடுத்தது....மனம் கொள்ளாமல் கேட்டும் விட்டான்

''சார்வால் அடுத்த ஸ்டாபிங்கு எங்க பாட்டி ஊரு''

நடத்துனர் ''உம் தெரியும் டே இதே ரூட்டுல தான்டே நீ பிறக்குரதுக்கு முன்னாடில இருந்து

ஓடிட்டு இருக்கேன் எனக்கே சொல்லித்தரியால?? ''

சிறிது அமைதி காத்தவனாய் மீண்டும்...

''சார்வால்''என்று பம்மி அழைத்தான்...

நடத்துனர் எரிச்சலாக ''என்னல வேணும் ஒனக்கு ஒழுங்க கணக்க பாக்க விடுதியா??'' என்று கத்தினார்

இவனும் சிறிது மென்மையாக ''மிச்ச சில்லற 1.50'' என தயக்கத்துடன் கேட்டான்

'' செவத்த மூதி உங்காச கொண்டுபோய் கோபுரமால கட்ட போரேன்?? இரு தரேன்'' என்று உச்சஸ்தாயில் கத்தினார்...

இவனுக்கு அழுகையே வந்துவிட்டது..

இறங்கும் முன் இந்தா மூதி உன் காசு இத நா என்ன முழுங்கவா போறேன் என்று செல்லமாக

அவன் கன்னத்தில் தட்டி கையில் தினித்தார்..

இவனும் மகிழ்ச்சிப்பீறிடுக்க இருக்கமாக அக்காசுகளை பிடித்துக்கொண்டான்....

நடத்துனர் அடித்த ஒற்றை விசிலில் கிரிச்சென்று நின்றது பேருந்து....

இவனும் தடி அகற்றிய கன்று போல அண்ணாச்சி கடை நோக்கி ஓடத்துவங்கினான்....

காதலிக்க நேரமுண்டு -2

அமைதியாய் டீவியில் மூழ்கிய ரகுவை விசித்திரமாக
 பார்த்துக்கொண்டிருந்தாள் லக்ஸா...

அங்கு வந்த பவி ( மிதுனின் காதலி,லக்ஸாவின் உயிர்த்தோழி) இவளை
 பார்த்து சற்று செறுமியபடி....
''  வந்ததுல இருந்து அவனையே பார்த்திட்டு இருக்க ஏதாவது ரசாயன மாற்றமா??? '' என்று கண் அடித்தபடி அவளருகில் அமர்ந்தாள்..

லக்ஸா நினைவு திரும்பியவளாக '' இல்ல டா வார்த்தைய வைத்தே ஊர சொல்ரான் சம் திங் மிஸரில???'
பவி : "நானும் மிதுன்ட இவனை பத்தி இப்போ தான் கேட்டேன் டி...கொஞ்சம் வித்தியாசமானவனாம் யாரிடமும் ஈஸியா பழக மாட்டானாம் கிட்டத்தட்ட ஒரு சைக்கோ...."

லக்ஸா : சரி நான் இங்க வந்து ரொம்ப நாள் ஆகுது எனக்கு ஒரு தனி சிம் கார்ட் கிடைக்குமா???

பவி : இரு மிதுன்ட கேட்குறேன்...மிதுன் இங்க வாடா....

மிதுன்  உள்ளிருந்து வந்தான்..''.கியா ஹே???'' என்று செல்லமாக அவள் முதுகில் தட்டினான்...

பவி : இவளுக்கு சிம்கார்ட் வேணுமாம் டா உன் ஐடில வாங்கி கொடு.டா

மிதுன் ரகுவை நோக்கி '' மச்சி ஒரு சிம் கார்ட் வேணும்  டா... முடியுமா?? ''
ரகு ''ஐடி ஃப்ரூப்....போட்டோ??? ''

லக்ஸா : '' டுட் எனக்காக இது கூட பண்ண மாட்டியா?? நானும் உனக்கு பிரண்டு தானே?? ''

ரகு சற்று யோசித்தவாறு தன் பையிலிருந்து ஒரு பிலாஸ்டிக் கவரை எடுத்து அதிலுள்ள சில சிம்கார்டுகளை எடுத்து கொட்டி அதிலிருந்து ஒரு சிம்மை மட்டுமெடுத்து அவளிடம் நீட்டினான் ''இது எனக்கு பிடிச்ச நம்பர்..... பிரண்டுனு சொன்னதால வச்சுக்கோ...''

பவி : ''இத்தனை சிம் வச்சிருக்க நீ என்ன தீவிரவாதியா???''
ரகு அவளை சட்டை செய்யாமல் மற்ற சிம்கார்டுகளை மீண்டும் பையில் போட்டான்

லக்ஸா : '' தேங்க்ஸ் டுட்'' ரகு அதை காதில் வாங்காமல் சமயலரையில் உள்ள குடத்தை தூக்கி ஒரே மடக்காக தண்ணீர் குடிப்பதை அனைவரும் விசித்திரமாக பார்த்தார்கள்

ரகு மிதுனிடம் '' டேய் டைம் ஆச்சு தூக்கம் வருது என்ன பண்ண போற???''

மிதுன் '' மச்சி நாங்க ரெண்டுபேரும் ரூமுக்கு போறோம் கெஸ்ட் ரூம்ல லகஸா படுக்கட்டும் நீ சோபால படுத்துக்கோடா...பிளீஸ்''

இடைமறித்த லக்ஸா ''டுட் நோ பிரபலம் நீ கூட பெட் ஸேர் பண்ணிக்கோ நோ அப்ஜக்ஸன்'' ..

ரகு '' பரவா இல்லை நான் இங்கயே படுத்துக்குறேன்''

லக்ஸா '' அப்போ நானும் இங்க படுத்துக்குறேன் நீ என்ன கடிச்சு முழுங்கவா போற??? ''

ரகு :'' அது உன் இஷ்டம்''

 இருவரும் டீவியில் மூழ்கி்னர்...மணி இரவு 11 எட்டியது இருவருக்கும் உறக்கம் கண்ணை சொருகியது...அவள் அவனை பிறந்த குழந்தையை தாய் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தாள்...அவன் அவளை பார்தத பொழுது தலையை திருப்பி கொண்டாள் இவனும் அவளை சட்டை செய்யாமல் சமயலறை நோக்கிச்சென்றான்... கதவின் முன்பு நின்று பின்னால் திரும்பி சற்று நிதானமாக ''லக்ஸா காஃபி வேணுமா??? ''என்றான்...

திடுக்கிட்ட லக்ஸா 'இரவு தூங்கும் முன் காஃபியா??'என்று விளித்தாவாரு வேண்டாமென்று கூறுமுன் அவ்விடத்தைவிட்டு நகன்று சமயலறையினுள்
மறைந்தான்...

இவளும் அவ்விடத்திலேயே உறங்கத்தொடங்கினாள்....உள்ளிருந்து காஃபி குவளையுடன் வந்த ரகு குவளையை வைத்துவிட்டு அவளை ஒழுங்காக படுக்க வைக்க அருகில் வந்தான் எழுப்புவதா?? இல்லை தானே நகற்றுவதா?? என்ற  குழப்பத்தில் அவளருகில் கையை கொண்டு சென்றான்...

சற்றென்று விழித்தவளாய் அவன் கண்களை இமைக்காகமல் பார்த்துக்கொண்டிருந்தாள் என்ன செய்வதென்று தெரியாமல் ரகு '' கொஞ்சம் ஒழுங்கா படுத்துக்கோ...கீழ விழுந்திடாத'' எனக்கூறிவாரே தரையில் படுத்துறங்கினான்....

 இவளும் உள்ளுக்குள் காதலெனும் கயவன் விழித்தெழுவது தெரியாமல் உறங்கினாள்......

நேரம் வளரும்.....

Wednesday, 19 September 2012

காதலிக்க நேரமுண்டு


இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உன்மையே....ஒரு சில காரணங்களால் பெயர்,இடம் மாற்றப்பட்டுள்ளது...

பகுதி 1
---------

கிராமத்திலிருந்து பல கனவுகளுடன்?! ரகு படிப்பதற்காக சென்னை வந்தடைந்தான் ஒருவாராக ஓராண்டு காலம் உருண்டோடியது..

அவனும் தட்டுதடுமாறி பல போராட்டங்களுக்கு பிறகு இவனுக்கென்று ஒரு சில  நண்பர்களை கண்டெடுத்தான்.

அவர்களும் நமக்கு போரடிக்கும் பொழுது இவனை யுஸ் பண்ணிக்கலாமென்று இனைத்துக்கொண்டனர்..

சரியாக ஒரு வெள்ளிக்கிழமை மதியம் வகுப்பிலிருக்கும் பொழுது ஒரு குறுந்தகவல்.
." machi come 2 our meeting spot soon after clge one surprise for u "

அவனும் பாதி வகுப்பில் ஆட்டய போட்டுட்டு நண்பனை பார்க்க சென்றான்.....

அவனது நண்பன் மிதுன் என்றுமில்லாமல் அன்று  அழகாக வந்தான்

ரகு : டேய் வாட் இஸ் திஸ்?? என்ன சர்ப்பரைஸ்...????

மிதுன் : வண்டில உட்காரு சொல்லரேன்...

ரகு : இப்போ எங்க என்ன கூட்டிட்டு போற???

மிதுன் : வா பார்க்க தான போற,,,,,,முதல்ல இந்த மொக்க சட்டைய மாத்து பின்னாடி  டீ ஷர்ட் இருக்கு...அத போட்டுக்கோ...

ரகு : சரி...டா என்ன விசயம்னு சொல்லு...

மிதுன : என் லவ்வர் எனக்கு ஓகே சொல்லிட்டா டா...அவள பார்க்க தான் போறோம்....

ரகு : அதுக்கு நா எதுக்குடா??? நம்ம தேஜூ, ஐஸு, கார்த்திக்.ஸ்வேதாலாம் எங்க???

மிதுன் : அவங்களாம் அங்க வந்திடுவாங்க உன்ன கூட்டிகிட்டு வரதுக்காக தான் நான் வெயிட் பண்றேன்...

ரகு :(கண்ணோரம் வந்த நீர்த்துளியை துடைத்து) congrats மச்சி....டிரீட் டா????

மிதுன் : ஆமா இவரு அப்படியே நாலு லார்ஜ் உள்ள விடுவாரு

ரகு : சரி டேமேஜ் பண்ணாத.....எங்கடா  போரோம்???? காபி டேவுக்கா??? இல்ல பப்புக்கா???

மிதுன் : இல்ல டா சிட்டி மாலுக்கு...
(ரகுவின் மனதில் பல எண்ணங்கள் ஓடியது....)

மிதுன் :  டேய் நா என் லவ்வர பார்க்க போறேன் நீ என்ன கனவு காணுற???
அவ பிரண்டு யாராவது இருந்தா இன்ட்ரோ பண்ண சொல்லறேன் ஆனா உன் கூட பழகுறதுக்கு யோசிப்பாலுக...உன் அப்ரோச்ச கொஞ்சம் மாத்தினா ஈஸியா மாட்டும் டா உனக்கு....

ரகு : அப்படி ஒரு ___________ தேவையில்லை...நீ வண்டிய பார்க் பண்ணிட்டு வா...நா இங்கயே நிக்குறேன்.....

இருவரும் உள்ளே சென்றனர்....ரகு  எப்பொழுதும் போல் மனிதர்களையும், அங்கிருக்கும் பொருட்களையும் நோட்டமிட்டபடி சென்றான்

அறிமுக படலம் முடிந்து அனைவரும் உணவருந்த அமரும் பொழுது... ஹீரோயின் (லக்ஸா) வந்தால்

"ஹேய் சாரி கைஸ்...லிட்டில் லேட்...இதுல யாரு மிதுன்???? ஹூ இஸ் தேட் லக்கி கை?? "

எல்லாரும் உடனே ரகுவை கைகாண்பித்தார்கள்....
லக்ஸா..."ஹூம் நாட் பேட் கங்கிராட்ஸ் டுட்...."

எல்லாரும் அவர்கள் இருவரைப்பார்த்து சிரித்தார்கள்...
ரகு எழுந்து நடந்தான்...

அவள் அவன் கையை பிடித்து 'சாரி டுட் ப்லீஸ் ரியலி சாரி'' அவன் கையை பிடிக்கும் முதல் வெளிப்பெண்...அவனுள் ஆயிரம் எண்ணங்கள் இமைப்பொழுதில் வந்து சென்றது....

ரகு :'' ஆர் யூ ஃபிரம்  ஆந்திரா ஹைட்????''

லக்ஸா : "யா...செகன்டிராபாத்...எப்படி கண்டுபிடிச்சே???' ' (தெலுங்கில் உரையாடல்)

ரகு : எனக்கு அது தானா வந்தது பேசுறத வைத்தே சில சமயம் கண்டுபிடிச்சிடுவேன்.....

மிதுன; ஹலோ குல்டீஸ் இங்க என்ன நடக்குது???

அவள் அவன் கையை விடுவித்து '' நத்திங்...''

அவள் அவனிடம் : '' மீ லக்ஸா...யூ??? ''

மிதுன் '' ஐ யாம் மிதுன், திஸ் இஸ் ரகு, தேஜூ, ஐஸு, கார்த்திக்.ஸ்வேதா''

லக்ஸா..:.'நைஸ் டூ மீட் யு கைஸ்''
அறிமுகப்படலம் முடிந்து அனைவரும் மிதுனின் இல்லத்திற்க்கு சென்றனர்...
ரகு அமைதியாய் டீவியில் மூழ்க தொடங்கினான்....லக்ஸா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்......


தொடரும்......

Saturday, 15 September 2012

கற்றது கசடு

இது சற்று விசித்திரமானதாக இருக்கலாம் ஆனால் நூறு சதவிகிதம் உண்மையானது.
இதை ஒரு தொடர்கதை போல எழுதாலாமென்றுள்ளேன்...

சிறு வயதில் எல்லோருக்கும் இவ்வகை நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும..
ஆம் நம் பெற்றோரே இவனிடம் பழகாதே,இக்குடும்பம்,
இச்சாதியினரிடம் பழகாதே எனக்கூறுவது இன்றுவரை தொடர்கிறது
அதுவும் பார்ப்பன குடும்பத்தில் பிறந்த என்னைப்போன்றவர்களுக்கு அதிகமுண்டு..

ஆனால் எனது வாழ்க்கையில் சற்று விசித்திரமாக நிகழ்ந்துள்ளது
என் அம்மா சுகாதாரச்செவிலியர் இங்கு ஆரம்பிக்கிறது முரண்...

''ஜாதிகள் இல்லையடி பாப்பா குல உயர்ச்சி,தாழ்ச்சி சொல்லுதல் பாவம்''
என்ற முண்டாசுக்கவிஞனை கண் முன் காட்டுபவர் ஆயினும் அவரது பிள்ளையாகிய நான் என் சாதி பிள்ளைகளுடனும் சற்று சாந்தமாக இருக்கும் ஜாதிப்பிள்ளைகளிடத்தில் மட்டுமே சேர வேண்டும் என கூறுபவர் என்னடா இடிக்கிறதென்று தோன்றுதா?? அதற்கான காரணம்
தொடரும் பதிவுகளில்....

சரி விசயத்திற்கு வருவோம் அம்மாவின் வேலை காரணமாக இந்திய தேசத்தின் கடைக்கோடி
மக்களின் வாழ்வை சிறுவயதிலேயே படிக்கும் பாக்கியசாலி நான்...

எழுத ஆரம்பித்தவுடன் ஒரு அதிர்ச்சி முரண் தரவேண்டாமா???

இதோ உங்களுக்காக ஒரு நிகழ்வு...

4 வகுப்பு முழு ஆண்டு விடுமுறை சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்ட நேரம் அம்மாவின்
ஹெர்குளீஸ் லேடி பேர்ட் சைக்கிளை எடுத்துக்கொண்டு மற்ற மேல் சாதி நண்பர்களுடன்
ஊர் சுற்ற கிளம்பியாயிற்று மொத்தம் 12 பேர் என்னையும் சேர்த்து..
எங்களூரில் சாதிவாரியாகதான் தெருக்கள் இருக்கும்..
கிராமத்தில் (பார்பன தெரு) தொடங்கி மூப்பனார்,செட்டியார்,வேளார் தெரு வழியாக
நாடார் தெருவைத்தொட்டு அங்கிருக்கும் நல்லி (குடிநீர் குழா)யில்  தாக சாந்தி செய்து  அடுத்த தெருவான பச்சேரி (அரிஜன தெரு)க்கு வண்டியை அழுத்தினால் சிலர் நாங்கள் வரவில்லை என்றுரைத்தனர் அவ்வாரே அந்த தெருக்களை கடந்து மற்றொரு தெருவிற்குள் நுழைந்தால் அங்கு மீண்டும் தாகமெடுத்தது அங்கு தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தவர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்டால் அம்பி நீங்களாம் இங்க தண்ணி குடிக்க கூடாது என்று கூறினார் முகத்திலடித்தார் போன்றிருந்தது...பார்பன்னாக ஏன் பிறந்தேன் ?? என்ற கேள்வி எழுந்தது...விடை தேடும் படலம் அன்று தொடங்கி இன்று வேறொரு பரிணாமத்தில் பயணிக்கிறது....அவற்றை கூறினால் எவ்வளவு மக்கள் ஏற்பார்களென்று தெரியவில்லை....ஹம்......பார்க்கலாம்....

கசடுகள் தொடரும்.....