Friday, 18 October 2013

11.
ஒரு சிறு புள்ளியில்
பூக்குமென்பார்கள்

முதலில் சிறு மையல் என்பார்கள்
யாவும் பிதற்றல் என்பார்கள்

அனிக்ஞையாய் உணர்வுகள்
உரசும் என்பார்கள்

இவ்வாறு கவிதைகள்
கடிக்கும் என்பார்கள்

வெறும் பாலின ஈர்ப்பு என்பார்கள்
வீரியமில்லா விசயமென்பார்கள்

இவர்களை புறந்தள்ளிவிட்டு
கடற்கரை மணலில்

கால்கள் ஒரு சேர அலைகளில் முத்தமிட
என்னை கிறுக்கனாய் பார்க்கும்

உன் விழி அசைவுகளை இரசித்துக்கொண்டிருக்கின்றேன்

உப்புக்காற்றில் ஊசலாடும் உன்
சிக்கற்றக்கூந்தில் அசைவுக்கினங்க

அத்துனை இரைச்சலுக்கு மத்தியிலும்
அழகான உன் கொலுசின் ஓசை... 

No comments: