7.
வெண்ணைப்பானையினை மேலெடுத்து
உரி உடைத்து தயிர் கிடைந்து
முகம் அப்பி அமுதுண்ணும்
முதற்பொருளோனே!
சிறுபிள்ளையென்றுரைத்தேன் உன்னை
சிரித்துக்கொண்டே சிகை கோதி
செதில் மருடி சிறகடிக்கின்றாய்
என் இன்பவானில் ஈசல் பறவையாக
மழைவரும் அறிகுறி ஈசலுடன் பார்த்துவிட்டு
என் கீழ் வானம் இருளில் சூழ
காதல் மழை பொழிய வந்தாயோ??
காதில் ரீங்காரமிடும் தோமையாய் குடிக்கின்றாய்
என் உயர் அழுத்த இரத்தத்தினை
எங்கோ கன்னட நாட்டில் விட்டலாய்
கால் ஊன்றி அமர்ந்துவிட்டாய்
எளியவன் உனைத்தேடி எங்கெங்கலைவது??
குருவாயூரிலா வந்து பார்ப்பது??
குறைகூற மனமில்லாமல் குமுறுகின்றேன்..
எனக்கோர் வீணை செய்து ஆளிங்கனம் மீட்டிவிட்டுப்போ..அப்புல்லாங் குழலை
புறத்தே வீசிவிட்டு யாழெடுத்து அசைவுகொடு
எம் இலங்கைத்தென்நகர் இசைந்து கொடுக்க
கேள்வியுற்றேன்!! கேளிக்கை எதுவுமின்றி
பொடிநடையாய் உன் உருவம் காண
பொழுது போகுமுன் வரும் பாமரரையும்
புதுப்பட்டாடை உடுத்தி வாசனை திரவியங்கள் தெளித்து
வான் முகில் கோபியுமிட்டு..
கோபுரத்திலிருந்து ஆசையாய் பார்ப்பாயாமே??
வாசலிலிருந்து கருவரை வரை கைத்தாங்களாய்
வாரிச்சென்று உன்னழகை உரிப்பாயாமே??
எத்துனை நாட்கள் எனக்காக காத்துக்கிடந்தாய்??
எத்துனை மணித்துளிகள் எனக்காக வருந்திக்கிடந்தாய்??
எத்துனை ஏக்கம் என் கண்ணனிடத்தில் இருந்திருக்கும்??
என் கண்ணே!! கார் இருளவனே!!
கருவரை வரும் வரை காத்திடாமல்
எந்தையின் வருக்கைகாக கதவோரம் காத்திருக்கும்
சிறுவன் போல கோபுர கலசங்கள் பற்றி
கூத்தாடிக்கிடந்தாயோ??
உன்னை கண்டவுடன் இமைக்கும் இதழ் புன்னகையும்
ஆரத்தழுவி ஆயிரம் முத்தமிடும் ஆசையிலும்
ஆரத்திக்காண்கின்றேன் உன் ஆனந்த கோலத்தை
இப்பிறவியேதும் விடயமில்லை பயனுமில்லை
கற்சிலையாய் மாற்றிவிடு உன் சிலை முன்
காலங்கடந்தும் காதலிப்பேன் என் வாலிபக்குழந்தையை!!
விட்டலா என்றுரைக்க விருப்பமிருந்தும் வார்த்தையில்லை
வின் முட்டும் சனத்தொகையில் என் மனமட்டும்
பார்த்துவிட்டு வீடு திரும்புகின்றேன் விடைபெற மனமில்லாமல்...
உரி உடைத்து தயிர் கிடைந்து
முகம் அப்பி அமுதுண்ணும்
முதற்பொருளோனே!
சிறுபிள்ளையென்றுரைத்தேன் உன்னை
சிரித்துக்கொண்டே சிகை கோதி
செதில் மருடி சிறகடிக்கின்றாய்
என் இன்பவானில் ஈசல் பறவையாக
மழைவரும் அறிகுறி ஈசலுடன் பார்த்துவிட்டு
என் கீழ் வானம் இருளில் சூழ
காதல் மழை பொழிய வந்தாயோ??
காதில் ரீங்காரமிடும் தோமையாய் குடிக்கின்றாய்
என் உயர் அழுத்த இரத்தத்தினை
எங்கோ கன்னட நாட்டில் விட்டலாய்
கால் ஊன்றி அமர்ந்துவிட்டாய்
எளியவன் உனைத்தேடி எங்கெங்கலைவது??
குருவாயூரிலா வந்து பார்ப்பது??
குறைகூற மனமில்லாமல் குமுறுகின்றேன்..
எனக்கோர் வீணை செய்து ஆளிங்கனம் மீட்டிவிட்டுப்போ..அப்புல்லாங்
புறத்தே வீசிவிட்டு யாழெடுத்து அசைவுகொடு
எம் இலங்கைத்தென்நகர் இசைந்து கொடுக்க
கேள்வியுற்றேன்!! கேளிக்கை எதுவுமின்றி
பொடிநடையாய் உன் உருவம் காண
பொழுது போகுமுன் வரும் பாமரரையும்
புதுப்பட்டாடை உடுத்தி வாசனை திரவியங்கள் தெளித்து
வான் முகில் கோபியுமிட்டு..
கோபுரத்திலிருந்து ஆசையாய் பார்ப்பாயாமே??
வாசலிலிருந்து கருவரை வரை கைத்தாங்களாய்
வாரிச்சென்று உன்னழகை உரிப்பாயாமே??
எத்துனை நாட்கள் எனக்காக காத்துக்கிடந்தாய்??
எத்துனை மணித்துளிகள் எனக்காக வருந்திக்கிடந்தாய்??
எத்துனை ஏக்கம் என் கண்ணனிடத்தில் இருந்திருக்கும்??
என் கண்ணே!! கார் இருளவனே!!
கருவரை வரும் வரை காத்திடாமல்
எந்தையின் வருக்கைகாக கதவோரம் காத்திருக்கும்
சிறுவன் போல கோபுர கலசங்கள் பற்றி
கூத்தாடிக்கிடந்தாயோ??
உன்னை கண்டவுடன் இமைக்கும் இதழ் புன்னகையும்
ஆரத்தழுவி ஆயிரம் முத்தமிடும் ஆசையிலும்
ஆரத்திக்காண்கின்றேன் உன் ஆனந்த கோலத்தை
இப்பிறவியேதும் விடயமில்லை பயனுமில்லை
கற்சிலையாய் மாற்றிவிடு உன் சிலை முன்
காலங்கடந்தும் காதலிப்பேன் என் வாலிபக்குழந்தையை!!
விட்டலா என்றுரைக்க விருப்பமிருந்தும் வார்த்தையில்லை
வின் முட்டும் சனத்தொகையில் என் மனமட்டும்
பார்த்துவிட்டு வீடு திரும்புகின்றேன் விடைபெற மனமில்லாமல்...
No comments:
Post a Comment