கடற்கரையில் கால் பதித்த உடன் சிறு பிள்ளை போல சிலாகித்து கடலலை காலில் உரச விளையாடி மகிழ்ந்தனர் அப்பொழுது மிதுன் ஒரு போட்டி வைத்தான் யார் குழுவாய் மணற்வீடு கட்டுவதென்று....
மிதுனும் ரகுவும் ஒரு குழுவாகவும் பவி லக்ஸா ஒரு குழுவாகவும் பிரிந்து கட்ட துவங்கினர்...பெண்கள் இருவரும் அழகாய் கட்ட இவர்களுக்குள் தோற்றுவிடுவோம் என்ற எண்ணம் மேலோங்கியது....ஒரு சிறிய பிளான் அன்றைய பொழுதை அழகாய் மாற்றியது...
ரகு ; மச்சி இப்படியே போச்சுனா நாம தோத்துட போறோம் டா....
மிதுன் ; அதான் ஏன்ட ஒரு பிளான் இருக்கு டா...
ரகு ; என்ன???!!!!
மிதுன் ; நீ அவங்க்கிட்ட பேச்சு கொடு
ரகு ஒன்றும் புரியாதவனாய் அவர்களிடம் சென்றான்...அவர்களிருவரும் அவன் வருவதை சட்டை செய்யாமல் வீடு கட்டுவதிலேயே குறியாய் இருந்தனர்...
மிதுன் ரகுவை அழைக்க ரகு என்ன என்று கேட்டான்.....
மிதுன் கோவமாய் வருவது போல் ரகுவை அவர்கள் வீட்டின் மேலே தள்ளி விட்டான்...
வீடு உடைந்த அதிர்ச்சியில் அவர்களிருவரும் ஆளுக்கொருவரை அடிக்க அடிதாங்க முடியாமல் ரகு லக்ஸாவை தள்ளிவிட லக்ஸா முழுவதுமாய் கடல் நீரில் நனைந்தால் அருகில் மிதுனும் பவியும் கடலலை தம்மை மறந்து விளையாடிக்கொண்டிருந்தனர் காதல் சொட்ட...
போட்டியில் ரகுவும் மிதுனும் கட்டிய வீட்டை இடிக்க லக்ஸா செல்ல அவளை தடுக்கும் நோக்கத்துடன் ரகு பிடிக்க இருவரும் இனம் புரியாமல் சண்டையிட்டனர் செல்லமாக.....கடைசியில் லக்ஸா அவன்பிடியிலிருந்து விலக அந்த வீடும் அடித்துச்சென்றது கடலலையில்....
கடற்கரையில் சில மணிநேரங்கள் போனது தெரியாமல் அனைவரும் விளையாடிக்கொண்டிருந்தனர்....
அனைவரின் வயிற்றிலும் பசிப்பெருமான் நடனமாடத்துவங்க சற்று நிதானித்து காரை நோக்கி நடந்தனர்...ஈர உடையெங்கும் மணலொட்ட ஒருவருக்கொருவர் வண்ணமாய் வடிந்த நீரினை துடைத்து காரில் அமர்ந்து இருப்பதை பகிர்ந்தனர்..
லக்ஸாவின் இயல்பு அவளை ரகுவை சுற்ற வைத்தது...அவனோ அவளின் அவயங்களில் கண்பதிக்கிறான்....மீண்டும் ஒரு நாள் விசித்திரமாக முடிந்தது..
அவனும் அவளும் நேரம் கிடைக்க காதல் வளர சில காலங்கள் அமைதியாய் திரிந்தது.....
No comments:
Post a Comment