Thursday, 28 March 2013

காதல்

முத்தத்தோடு வன்முறை செய்தாய்
முகம் பார்க்க திரும்பிச்சென்றாய்
வானம் மட்டும் இங்குள்ளது அதன்
வண்ணம் யாவும் விலகிச்சென்றது

வண்ணப்பூவில் தேன் உள்ளது-அதை
வாங்கிச்செல்ல மான் வந்தது
வெளிச்சம் தர விளக்குகள் வேண்டும்
வேண்டி வர வரங்களும் வேண்டும்

வெண்ணிலா உன் முகம் காண
வெட்றுடம்பாய் வேர்த்து அலைகிறேன்
விழியிரண்டும் வியர்வை சிந்த.
முதல் ரத்தம் சிந்திய பொழுது
மனதிலே தெரிந்தது நான்தானோ???

முதல் முத்தம் தந்து செல்ல
மூக்கின் கீழே இதழ்களுமுண்டு
குளிர் காற்றும் இங்கு சுடுகின்றது
கால்கள் இடறி தவழ்கின்றது

ஏன் என்னை  கொன்று புதைக்கிறாய்???
காமம் என்னும் படுகுழியில்
காதல் என்னும் கல்லறையில்....

No comments: