ஆழி மலை கள்ளனவன்
ஆயர்தம் மாயனவன்
காலிங்க நர்தனம்
கண் மறந்து புவி சொக்க
பெண் மறப்பாள்
காண்பவனை...!!!!
காரிருள் கரிய மேகம்
யமுனை கரையோரம்
நின் கானம்
நீர் எடுத்து நிலம் கடந்து
வைக்கின்றேன் காலடியை
நின் புல்லாங்குழல் கானம்
பிருந்தாவனத்திலொரு ஸ்வப்னம்
நின் மடிசாய்ந்து கிடக்கிறேன்
நீயே கல்லாய் நானுறங்க
களவனைப்போல் காதல் பறிக்கிறாய்
பறிப்பது கள்வனன்று கண்ணனல்லவோ??
கள் அருந்திக்கிடப்பதுபோல் ஒரு மயக்கம்
பரிமேல் முகிலன் நின் கண்ணம்
பதிக்க முதல் முத்தங்கள்
ராதாவுமல்ல,மீராவுமல்ல
ஆயர்பாடி கோபியருமல்ல
நின்னுடன் ஆடிப்பாட
ஆண்டாளுமல்ல சூடிக்கொடுக்க
ஆருயிர் கொள்ளும் நின் மௌன
மொழி வேண்டி நின்றேன்
நானும் மௌனியாக என்னுள்
நீயும் மௌலியாக....!!!!!!

No comments:
Post a Comment