இடித்தாய் மெல்ல சிரித்தாய்
சிறு புன்னகையில் விளித்தாய்.-உன்
இடைபிடித்து இதழ் பழிக்க ஆசை
நீ நகங்கடிக்கும் நிடையில்
தொலைந்து போகிறேன்
நான்...
என் நெஞ்சோடு உன் விரல்
தழுவும் ஸ்பரிசம்-விதமாய்
நான் இழுக்க
விருட்டென நீ தடுக்க
உன் மார்பில் முகம் புதைக்கிறேன்
என் தலைகோதி முத்தமிட்டாய்
உன் முத்ததின் சத்தம் அடங்குவதற்குள்
என் முழுவுயிரையும் பறித்தாய்...
தேவதை என்று நினைத்தேன் நான்
தேன் வண்டு முகர்வது போல்
பதம் பார்த்தாய் உன் பார்வையில்
பாதி வழியில் பதம் தெரியாமல்
பரிதவிக்கிறேன் பாசாங்கு செய்யாமல்
பண்பாய் கூறு போடு உன் கூரிய
நகங்களால்.... <3 <3 <3
No comments:
Post a Comment