ஆயர் பாடியில் நீ உறங்க
ஆத் மீகனாய் நான் இருக்க
பால நடை பயின்றாய் - நீ
அஷ்டமித்த திரு நாளில்
அடி எடுத்து வைத்தான்
கோபாலனாய் என் வீட்டில்.....
என்றும் தரும் பேருவகை நின்
இமை சிரிப்பில் கண்டுவிட்டேன்
எனக்காக நீ மட்டும்
ராதையாய் தனித்திருந்தாய்
பல் துலக்கா பல முத்தம்
தந்திருக்கிறேன் உன் படத்தில்
காற்றிலாடும் நின் படம்
காணவேண்டும் ஒரு தடம்
கண நேரத்தில் தோன்றும் மின்னல் - நீ
கை ஆட்டி அழைக்கும் பொழுது
கண் உறக்கம் தொலைத்தேன் கண்ணா..!!
சில நாள் தோன்றியது மனதில்
கோபி கன்னிகையாய் பிறக்கலாமென்று
சில நூறு முத்தம் தந்துவிட்டேன்
கோவர்த்தனா திருப்தி இல்லை...!!
மயிற் பீரி சூடிக்கொண்டாய்
மனத்திலே வருடல் தந்தாய்
முகிலவா நின் முகம் மட்டும் போதும்
முயலா பல கவி பிறக்கும் மனதில்...!!
நீல வண்ண கண்ணா நின்னை
நீங்கி நான் இல்லை- நாமும் இல்லை
ஆணாய் ஏன் பிறந்தேன் உன் அடி சேர
ஆசை இருக்காதோ???
அழுது புலம்பினேன் ஆண்டவா நீ மட்டும்
ஆனந்த தாண்டவம் புரிகின்றாய் காளிங்கா...
அடியார்க்கு அடியனே முதல்
அடி எடுத்து வைத்தேன் - என்
ஆதி காதல் நானும் சொல்ல....
முற்றும் துறந்த முழு சிரிப்பு
மூவுலகம் அளந்த வாமனா - நின்
மூச்சிடையில் முழுவதுமாய்
உயிர் வாழ்கிறேன்....
அள்ளி அனைத்து கோலமிடு
என் கோவம் தனிய முத்தமிடு
என் வாழ்வு மொத்தம் நீ அன்றோ??
ஜகனாதா மோகனமாய் வந்த
நிர்மல ஹரினி(ன்) மாயம்
மதுவாய் மயக்குது கொஞ்சம்......
இன்னும் என்னவெல்லாம் வேடம் புரிவாய்??
என்னை உன்னுள் ஆள்வதற்கு
மீண்டும் மௌனம் பூக்காதே
மனம் கொத்தி போனது போதும்
என்னுள் உன்னை எடுத்துக்கொள் - இவ்
வார்த்தைப் பிழையாய் என்றும்
என் வாழ்க்கைப் பிழை...கிருஷ்ண.....கிருஷ்ணா.......
1 comment:
அருமையான நடை..கொஞ்சம் முயற்சி செய்தால் இன்னும் அழகாய் வரும் நண்பரே...
Post a Comment