Sunday, 10 March 2013

கவி-3

நலமாய் சிறு புன்னகை
நீ மட்டும் சிந்திவிட்டு சென்றாய்

நாட்கள் நகர நடுநிசியும் பனித்தது
விலங்கிட்ட விழியில் வியர்வை செய்யும்
வேலை அதிகம்

வென்னிற மேகங்கள் யாவும்
வெளிச்சமின்றி அழைகிறது-உன்
விழி சிமிட்டளுக்காக...

கடற்கரையெங்கும் கடந்து செல்வேன்
கடலலையில் கால் பதிக்காமல்
நகரத்தின் நிசப்தமும் கசக்கிறதடி
நின் குரல் கேளாவிடின்


ஒவ்வொரு விநாடியும் வெண்சாமரம்
வீசும் உன் கார்கூந்தல் என் முகத்திரையில்

நண்பர்களுக்கும் எழுதுகின்றேன்-கவிதைகள்
நயம் பல  கலந்து செய்தும்
நின் முகம் தேடி திசையெங்கும் திரிகிறேன்....
என் மொழி எனக்கே மறந்து போகும்
உன் சினுங்களில்....


வார்த்தைகள் தேடி அலைகிறேன்
என் கவி சேர்க்க-ஏனோ
உன் முகம் மட்டும்
தெரிகிறது -என்
ஒவ்வொரு எழுத்துகளிலும்

இந்த கவியும் சிறந்ததல்ல
இன் முத்தம் கிட்டும் வரை
காதல் மட்டும் கருப்பொருளல்ல
சில பல எழுத்துக்களும்
சிறந்ததாய் விழும்
உன் விரல் தரும் ஸ்பரிசத்தால்....




No comments: