Thursday, 28 March 2013

காதலியே

அடி கண்மணி நீ தூங்கினால்
உன் கனவாகிறேன்
அடி பொன்மணி நீ தீண்டினால்
நான் தீயாகிறேன்

நீ பேசும் வார்த்தை மட்டும் இங்கு
நீங்கிச்சென்றதடி
நீ கண் சிமிட்டிப்போகும் நேரம்
காதல் பிறக்குதடி

உன் வாசல் தேடி வந்தேன்
என் நினைவும் போகவில்லை
உன் ஸ்பரிசம் தேடிச்சென்றேன்
என் பூவும் பூக்கவில்லை

உன் விழியருகில் நானிருந்தால்
என் வாழ்வும் போதவில்லை
இந்த மாயம் போதும் என்றேன்
என் உணர்ச்சித்தீரவில்லை


இனி என்ன நான் செய்வேன்
என் காதலியே....???
ஒரு வார்த்தை பேசிப்போடி
அடி பூங்குயிலே....

இந்த கள்ளச்சிரிப்போரம்
என்னை நான் இழந்தேன்
நீ செல்லம் கொஞ்சிப்போனால்
என் உயிரை நான் தருவேன்

என் பூவை தேடி வந்தேன் அது
தொலைந்து போனதடி
தொலைந்த இடம் தேடி அழைந்தேன்
உன் இதழில் பூக்குதடி
பல பூக்கள் வந்து செல்லும்
பொன் வசந்தம் நீயடி.............. <3 <3<3

No comments: