சில நாட்களுக்கு முன்பு
சுட்டெரிக்கும் வெய்யிலில்
சிகரெட் பிடிக்க கடைக்குச்சென்றேன்
அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருந்த
சிறுமியின் பாண்டியின் அழகில்
வைத்த கண் மாறாமல்
அவள் கால்களுடன் என்
கண்களும் கட்டங்கள் தாவிற்று..
என் அருகில் வந்து நின்ற
இளைஞரின் மனதில் எந்த வித சலனமும் இல்லை
மிடுக்கான உடையிலேயே
மார்க்கெட்டிங் ரெப் என தெரிந்துகொண்டேன்.
அவசரமாய் ஒரு டீயினை பருகி
பில்டரை பற்ற வைத்து - தீக்
குச்சியினை கோடுகளில் போட்டு
பாராமல் சென்று விட்டான்...
குழந்தை பாராமல் கால் வைத்து
கதறி அழ- வாங்கிய சிகரெட்டை
பற்றவைக்கக் கூட மனமில்லாமல்
அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்..
அவள் தந்தையோ " ஒன்னுமில்ல சாரே தண்ணி
ஊத்தினா சரியாகிடும் " என என்னை தேற்ற முயன்றார்
கையில் காசை கொடுத்துவிட்டு
கால்கள் தானாய் நடக்க
முதன் முதலில் காசின் மீது வெறுப்பு வந்தது
பற்றாத சிகரெட்டும் என்னை சுட குப்பையில் வீசி எறிந்தேன்..
உருண்டையாய் உறங்கும் இந்த பூமி பந்தில்
உயிர் பிரியும் வரை வலிகளும், அனுபவங்களும்
மட்டுமே வாழ்க்கையாய் வாழ சபிக்கப்பட்டோம் நாம்...
எரியும் அட்தீக்குச்சியின் புகையை போல
No comments:
Post a Comment